For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். மூத்த தலைவர் சிங்வியின் மனைவி நீரவ் மோடி நிறுவனத்தின் இயக்குநர்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம்.சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம்.சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மும்பையில் உள்ள நீரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக இருந்தார் என குற்றம் சாட்டியிருந்தார்.

Anita Singhvi, wife of Congress leader AM Singhvi linked with Nirav Modi jewellry company: Nirmala sitharaman

மேலும் நீரவ் மோடியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தை ஊக்குவித்ததே அவர்கள் தான் என்றும் நீரவ் மோடியின் நிறுவனத்திற்காக கட்டடத்தை குத்தகைக்கு கொடுத்ததும் அவர்கள் தான் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

உங்களின் மனைவி நீரவ் மோடியின் நிறுவனத்திற்கு இயக்குநராக இருப்பார், ஆனால் நாங்கள் தவறு செய்வதாக நீங்கள் குற்றம்சாட்டுவீர்கள் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நீரவ் மோடியுடன் தொடர்பிருந்தது தெளிவாக தெரியவந்தபோதும் பாஜகவை கைக்காட்டி குறை சொல்லும் தைரியத்தை காங்கிரஸ் கொண்டிருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

English summary
Defence minister Nirmala Sitharaman alleged that Anita Singhvi, wife of Congress leader AM Singhvi, was a director of one of the private holding firms which has dealing with Nirav Modi's jewellery company in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X