For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்பால்: டெல்லியில் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் அன்னா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

    டெல்லி: லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

    2011-ம் ஆண்டு நாட்டை அதிர வைக்கும் வகையில் ஜன் லோக்பால் அமைப்பை உருவாக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே நடத்திய இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாபெரும் ஆதரவு கிடைத்தது.

    Anna Hazare to begin indefinite fast for Lokpal

    இதையடுத்து லோக்சபால் அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு லோக்பால். இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹசாரே கைவிட்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து உதயமானதுதான் ஆம் ஆத்மி கட்சி.

    2014 லோக்சபா தேர்தலில் பாஜகவும் மத்தியில் ஆட்சி அமைத்தால் லோக்பால் அமைப்பு கொண்டு வருவோம் என உறுதியளித்தது. ஆனால் ஆட்சியை கைப்பற்றி 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் லோக்பால் உருவாக்கப்படவில்லை.

    இதனைக் கண்டித்து இன்று முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற போராட்டத்தை அன்னா ஹசாரே மீண்டும் தொடங்கியுள்ளார். இதனால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    English summary
    Social activist Anna Hazare will today begin an indefinite fast demanding a competent Lokpal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X