For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஎன்பி வங்கி மோசடியை போல மற்றொரு மோசடியும் அம்பலம்.. ரூ. 5,280 கோடி ஸ்வாகா

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி முறைகேடு புகார் வெளியாகியுள்ள நிலையில், புதிதாக இப்போது மற்றொரு வங்கி மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

நீரவ் மோடி வழக்கு குறித்து விசாரித்தபோது, விசாரணை அமைப்புகள், அவரது உறவினரான மேகுல் சோக்சி வீடுகளிலும், அவரின் கீதாஞ்சலி குரூப் நகைக்கடைகளிலும் ரெய்டு நடத்தின. அப்போது, பல ஆவணங்களை பறிமுதல் செய்தன.

Another loan worth Rs 5,280 crore not repaid by Gitanjali to 31 banks

அப்போது கீதாஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. முதலீடு என்ற பெயரில் 31 வங்கிகளில் மொத்தம் ரூ.5,280 கோடியை வங்கிகளில் பெற்ற இந்த நிறுவனம், அதை திரும்ப செலுத்தவில்லை என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

தங்களது தகுதி அளவுக்கும் மீறி கீதாஞ்சலி நிறுவனம் இந்த கடன்களை பெற்றுள்ளது. எனவே இதை மேகுல் சோக்சி திரும்ப செலுத்தாமல் விட்டால், வங்கிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிவரும்.

31 வங்கிகளின் கூட்டமைப்பில் ஐசிஐசிஐ வங்கிதான் லீடு வங்கி என்ற பொறுப்பில் உள்ளதாம்.

2016ல் கீதாஞ்சலி ஜூவல்லரி வாங்கிய கடன் நிலவரம்:

பஞ்சாப் நேஷனல் வங்கி: 587 கோடி
ஐசிஐசிஐ வங்கி: 405 கோடி
கார்பொரேஷன் வங்கி: 297 கோடி
பேங்க் ஆப் பரோடா: 265 கோடி
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா: 206 கோடி
சிண்டிகேட் வங்கி: 231 கோடி
கனரா வங்கி: 195 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 176 கோடி
இவ்வாறு நீள்கிறது அந்த பட்டியல்.

English summary
Days after the PNB fraud worth over Rs 11,400 crore involving diamond merchants Nirav Modi and Mehul Choksi came to light, another unpaid loan worth Rs 5,280 crore has cropped up against Choksi's Gitanjali Group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X