For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு.. மேலும் ஒரு சாமியார் அதிரடி கைது

Google Oneindia Tamil News

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற மாநாட்டில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பாக மேலும் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறிய வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி உள்ளிட்ட பல்வேறு இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.

அந்த மாநாட்டில் பேசிய இந்து மத ஆதரவாளர்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. சில இந்து மதத் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு மக்களை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தும் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

5 ஆயிரம் எங்கே என போஸ்டர் ஒட்டிய பாஜக.. பதிலுக்கு திமுகவினர் செய்த சம்பவம்.. பரபர கன்னியாகுமரி 5 ஆயிரம் எங்கே என போஸ்டர் ஒட்டிய பாஜக.. பதிலுக்கு திமுகவினர் செய்த சம்பவம்.. பரபர கன்னியாகுமரி

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு

மேலும் ஹரித்வார் நிகழ்வில் இந்து மதத் தலைவர் சாந்த் காளிசரண் மகாராஜ் பேசியபோது, அரசியலின் மூலம் தேசத்தைக் கைப்பற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்று அறிவித்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய பேச்சு வீடியோ வைரலாகிய நிலையில் காளிசரண் மகாராஜ் இந்து மதத்தை பாதுகாக்க ஒரு உறுதியான இந்துத் தலைவரை தேர்ந்தெடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

நாடு முழுவது இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன. மேலும் இதுபோன்ற பேச்சுகளை பிரதமர் கண்டிக்க வேண்டுமெனவும் கூறியிருந்தன. ​மேலும் ஹரித்துவார் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் எனவும், அவரது மெளனம் வெறுப்பு நிறைந்த குரல்களை ஊக்குவிக்கிறது என ஐஐஎம் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பினர்.

சாமியார் கைது

சாமியார் கைது

இந்த நிலையில் ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் இந்து மதத் தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரை உத்தரகாண்ட் காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறிய வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி அந்த கூட்டத்தில் கடுமையாகப் பேசிய நிலையில் முதலில் கைது செய்துள்ள நிலையில், தற்போது யதி நரசிங்கானந்தும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    ஆன்மீக பயணத்தில் அமிதாப் பச்சனுக்கு ரஜினி வேண்டுதல்
    ஜாமீன் மறுப்பு

    ஜாமீன் மறுப்பு

    வெறுப்பு பேச்சு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரகாண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட நிலையில், ஜிதேந்திர தியாகியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்தது. இந்நிலையில் தான் ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரித்வாரில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த யதி நரசிங்கானந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    English summary
    Another preacher has been arrested in connection with hate speech against ethnic minorities at a conference in Haridwar, Uttarakhand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X