For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் விமான என்ஜின் வாங்கியதில் ரூ10 ஆயிரம் கோடி லஞ்ச புகார்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Another scam hits defence ministry, Antony orders CBI probe
டெல்லி: நாட்டின் போர் விமானத்துக்கு என்ஜின் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய விமானப்படையில் 2007-2011-ம் ஆண்டுகளில், போர் விமானத்துக்கு என்ஜின் வாங்கியதில் ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு வந்த ஒரு கடிதம் மூலம் இந்த ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. முதல் கட்டமாக இதுகுறித்து விசாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் உத்தரவிட்டது.

அதில் லஞ்ச புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, லஞ்ச புகார் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

கடந்த 8 ஆண்டு காலத்தில் லஞ்சப் புகார் தொடர்பாக சுமார் 100 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏ.கே. அந்தோணி ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளார்.

English summary
The country's defence establishment has been hit by what seems to be another major scandal, forcing the government to order a CBI probe into allegations that global engine manufacturer Rolls-Royce committed irregularities and violated contractual provisions to bag contracts worth over Rs 10,000 crore from 2007 to 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X