For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 நாளில் மூன்று எம்எல்ஏக்கள்....கட்சியில் இருந்து விலகல்... அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 நாட்களில் 3 எம்எல்ஏக்கள் விலகி உள்ளது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக தலைவர்கள் நிலவி வருவது அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ள பாஜகவுக்கு புதிய தெம்பை கொடுத்து உள்ளது.

Another TMC MLA quits party, 3rd major exit in two days

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அவர் முதலில் அவர் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி கட்சியில் இருந்தும் விலகினார். கட்சியிலும், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் மிகவும் செல்வாக்கு மிக்க சுவேந்து அதிகாரி பதவி விலகி உள்ளது மம்தா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் மாநில எம்எல்ஏ ஜிதேந்திர திவாரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இன்று எம்எல்ஏ சில்பத்ரா தத்தா என்பவரும் கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

செவ்வாயில் புதிய ஏரிகள்... விண்வெளியில் மிதக்கும் சிறுகோள்... 2020-ன் அறிவியல் அதிசயங்கள்!செவ்வாயில் புதிய ஏரிகள்... விண்வெளியில் மிதக்கும் சிறுகோள்... 2020-ன் அறிவியல் அதிசயங்கள்!

கூட்டணி குறித்தும், பிரசார திட்டங்கள் குறித்தும் முடிவெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் மம்தா பானர்ஜியுடனும்,கருத்து வேறுபாடு காரணமாக எம்எல்ஏக்கள், மாவட்ட அளவிலான கட்சி தலைவர்கள் பதவி விலகி வருவது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது எனஉறுதியாக கூறலாம்.

தொடர்ந்து கட்சியில் இருந்து முத்த தலைவர்கள் விலகி வரும் நிலையில் மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருகிற தேர்தலில் மேற்கு வங்கத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற முடிவில் பாஜக உள்ளது. தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி வருவது பாஜகவுக்கு புதிய தெம்பை கொடுத்து உள்ளது.

English summary
The withdrawal of 3 MLAs from the Trinamool Congress party in West Bengal in 2 days has come as a huge setback and shock to Chief Minister Mamata Banerjee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X