For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜான் உடலைத் தேடாதீங்க.. அப்டியே விட்ருங்க.. அதுதான் நல்லது.. ஆய்வாளர்கள் அட்வைஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜானின் உடலை தேடவேண்டாம்... ஆய்வாளர்கள் அறிவுரை

    போர்ட் பிளேர்: ஜானின் உடலை தேடாமல் இருப்பதே நல்லது என மானுட ஆய்வாளர்கள் அந்தமான் போலீஸுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

    அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ஆலன் சாவ் (26). இவர் கிறிஸ்துவ மத போதகர். இவர் வெளியாட்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு பிரசாரம் செய்ய சென்றார்.

    இதற்காக 7 மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து படகில் சென்று இறங்கினார். அப்போது அவரை திரும்பி செல்லுமாறு ஆதிவாசிகள் சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. எனினும் அதை மதிக்காமல் ஜான் ஆலன் ஆதிவாசிகளை நோக்கி முன்னோக்கி சென்றுள்ளார். உடனே அவர் மீது அம்பை எய்து கொன்று கடற்கரை மண்ணில் புதைத்துவிட்டனர்.

    விரட்டியடித்த ஆதிவாசிகள்

    விரட்டியடித்த ஆதிவாசிகள்

    இதையடுத்து கடந்த ஒருவாரம் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை. அவரது உடலை மீட்கும் முயற்சியில் அந்தமான் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் அந்த தீவுக்கு 400 மீட்டர் தொலைவில் இருந்து அப்பகுதியை பைனாகுலர் கொண்டு பார்த்தனர். அப்போது சென்டினல் ஆதிவாசிகள் ஆலனை தாக்கிய இடத்தில் நின்று கொண்டு போலீஸாரையும் விரட்டியடித்தனர்.

    அதிகரிக்கக் கூடும்

    அதிகரிக்கக் கூடும்

    எனவே ஜான் ஆலனின் உடலை மீட்பது சவாலான காரியமாக உள்ளதாக அந்தமான் டிஎஸ்பி தேவேந்திர பதாக் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்டினல் ஆதிவாசிகள் குறித்த ஆய்வை நடத்திய மானுடவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகையில் தெற்கு அந்தமானில் உள்ள சென்டினல் தீவுகளில் ஜானின் உடலை தேடி போலீஸார் செல்வது பதற்றத்தை மேலும் அதிகரிக்கக் கூடும்.

    மதிக்கப்பட வேண்டும்

    மதிக்கப்பட வேண்டும்

    இது போன்ற ஊடுருவல்களை ஆதிவாசிகள் விரும்ப மாட்டார்கள். இதுபோன்ற தொடர் முயற்சிகளால் மேலும் வன்முறையை தூண்டிவிடும். மேலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே உருவாகும். ஆதிவாசிகளின் உரிமைகள் மற்றும் ஆசைகள் மதிக்கப்பட வேண்டும்.

    பார்த்தாகிவிட்டது

    பார்த்தாகிவிட்டது

    பதற்றத்தை உருவாக்குவதன் மூலம் எதையும் சாதித்து விட முடியாது. எனவே உடலை மீட்பது என்ற முயற்சியை போலீஸார் கைவிடுவதே நல்லது என்று கூறியுள்ளனர். ஜானின் உடலை மீட்க ஹெலிகாப்டர் மற்றும் கப்பலை கொண்டு தேடி பார்த்தாகிவிட்டது. அவரது உடல் இருக்கும் இடம் தெரியவில்லை.

    English summary
    Anthropologists have advised the Andaman police to drop searching American's body and leave the tribes alone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X