For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிஏஏ போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 7 நிர்வாகிகளுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் 7 பேர் நாளை ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் பல நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Popular Front of India funded CAA? says ED

இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் இந்தியா அமைப்புக்கு ரூ120.5 கோடி நிதி கிடைத்துள்ளது. இப்பணம் முழுவதும் சில நாட்களில் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டும் உள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு ரூ77 லட்சம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்சிங்குக்கு ரூ4 லட்சம், வழக்கறிஞர் தவேவுக்கு ர்ரூ11 லட்சம், காஷ்மீர் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு ரூ1.65 கோடி, நியூ ஜோதி குழுமத்துக்கு ரூ1.17 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்துல் சமதுக்கு ரூ3.10 லட்சமும் பணம் தரப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், 2017-18-ம் ஆண்டு ஹாதியா வழக்கில் 7 முறை ஆஜரானேன். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் என்னுடைய கட்டணத் தொகையை அனுப்பி வைத்தேன். அதற்கு அவர்கள் கட்டணம் செலுத்தினர். இதற்கும் சி.ஏ.ஏ.வுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 2017-18 கால கட்டங்களில் கொடுத்த செக் விவரங்களையும் கபில் சிபல் பகிரங்கப்படுத்தியுள்ளார். அத்துடன் இவை அனைத்துமே சி.ஏ.ஏ. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய கால கட்டம் என்பதையும் கபில் சிபல் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஜெய்சிங்கும் தாம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிடம் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்துக்காக எந்த பணத்தையும் பெறவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பொதுச்செயலாளர் முகமது அலி ஜின்னா வெளியிட்ட அறிக்கையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களுக்கு தங்கள் அமைப்பு நிதி உதவி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார். அத்துடன் ஹாதியா வழக்கு விசாரணைக்காகவே உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு பணம் தரப்பட்டது. அதற்கும் சி.ஏ.ஏ.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

7 நிர்வாகிகளுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 7 நிர்வாகிகள் நாளை ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அப்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் என தெரிகிறது.

English summary
According to ED Reports, Popular Front of India has funded protests against Citizenship Amendment Act across the country..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X