For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசுக்கு எதிராக பேசுவது தேச விரோதம் கிடையாது.. மோடிக்கு மாஜி அரசு அதிகாரிகள் பகிரங்க கடிதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அரசுக்கு எதிரான நிலைப்பாடு என்பது நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கிடையாது என்றும், தேசியம் என்பது தவறாக கற்பிதம் செய்யப்படுவதாகவும், முன்னாள் அரசு அதிகாரிகள் 65 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓபன் கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னால் கலாச்சாரத்துறை அமைச்சக செயலாளர் ஜவகர் சிர்கார், முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் பாஸ்ஸகர் கோஸ், முன்னாள் மும்பை போலீஸ்ஸ கமிஷனர் ஜூலியோ ரெபரியோ உள்ளிட்ட 65 அதிகாரிகள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Anti govt,not anti national, stop hyper nationalism: 65 former bureaucrats tell Modi in open letter

"உத்தரபிரதேச தேர்தலின்போது இரு மதங்கள் நடுவே ஓபனாகவே ஒப்பீடு செய்து பிரசாரம் செய்யப்பட்டது. முஸ்லிம்கள் பண்டிகைக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதாகவும், இந்துக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது. இதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என கடிதத்திலல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி தடை குறித்து சுட்டிக்காட்டுகையில், சிறுபான்மையினரை குறி வைத்த தாக்குதல் எனவும், அவர்கள் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மாட்டிறைச்சிக்கு எதிராக திரளும் பாசு காவலர்கள் தங்களையே நீதிபதியாகவும், விசாரிப்பாளராகவும் மாற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசியவாதம் தவறாக கற்பிக்கப்படுகிறது. அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்தாலே அவர் நாட்டுக்கு எதிரானவர் என முத்திரை குத்தப்படுகிறது. இது விமர்சனத்திற்கான மதிப்பை கெடுத்திவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
A group of 65 former bureaucrats have torn into the Modi government and questioned the rhetoric raised on issues such as nationalism. In an open letter to Prime Minister Narendra Modi the former bureaucrats have questioned the ‘growing hyper-nationalism that reduces any critique to a binary that if you are not with the government, you are anti-national’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X