For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை- 4 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் பலி

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுடன் கடந்த இரண்டு நாளாக நடைபெற்ற துப்பாக்சிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தேசத்திற்காக போராடிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கு, ராணுவத்தினருக்கும் இடையே கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றுவந்தது. இந்த மோதலில் ராணுவம் 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே ரக துப்பாக்கிகள் 4 மற்றும் வெடிபொருட்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

 Anti-Infiltration Operation: 4 Militants, 1 Jawan Dead in Kupwara

இதுகுறித்து, மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதி வழியாக வியாழக்கிழமை அதிகாலையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். இதையடுத்து, அவர்களை தடுக்கும் வகையில் ராணுவம் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தியது. தீவிவாதிகள் அனைவரும் உயரமான மலைக் குன்றுகளுக்கு பின்னால் பதுங்கி நின்றவாறு தாக்குதல் நடத்தின வந்தனர்.

முதலில், ஹங்பன் என்னும் ராணுவ வீரர் தீவிரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றார். இந்த தாக்குதலின் போது, ஹங்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், சண்டையில் இருந்து பின்வாங்காத அவர், தீவிரவாதிகளை எதிர்த்து தொடர்ந்து படையை வழிநடத்திச் சென்றார்

இம்மோதலில் மொத்தம் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தேசத்துக்காக போராடிய ஹங்பனும்(36) இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த ஹங்பன், அருணாசலப் பிரதேச மாநிலம், போடூரியா கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சேசன் லோவாங் என்ற மனைவியும், ஒரு மகள்(10), ஒரு மகனும்(6) உள்ளனர் என்றார்.

English summary
Four militants were killed and an army jawan lost his life in the two-day anti-infiltration operation along the Line of Control in Naugam sector in Kupwara district of north Kashmir, the army said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X