For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுல எதையாவது நிறைவேத்தியிருக்கா பாஜக.. கடைக்காரர் பொளேர்.. கப்சிப்பென வெளியேறிய அனுபம் கெர்

சண்டிகரில் மனைவி கிரணுக்காக நடிகர் அனுபம்கெர் வாக்கு சேகரித்தார்.

Google Oneindia Tamil News

சண்டிகர்: அசிங்கப்பட்டுட்டான் ஆட்டோக்காரன் என்று நம்ம ஊர்ல ஒரு பேச்சுக்கு சொல்வோமே.. அதுபோல ஆயிடுச்சு நடிகர் அனுபம் கெர் நிலைமையும்!

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் அவரது மனைவி கிரண் கெர் இருவரும் பாஜகவில் உள்ளனர். தற்போது நடந்து வரும் தேர்தலில் கிரண் கெர் போட்டியிடவும் உள்ளார்.

Anupam kher camaigned in Chandigarh for his Wife Kiran

இதனால் மனைவிக்காக மும்முரமாக பிரச்சாரத்திலும் கணவர் ஈடுபட்டு வருகிறார். ஓட்டு கேட்டும் செல்லும் இடங்களில் எல்லாம் அனுபம் கெரை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடி வருகிறது. ஆளாளுக்கு அவருடன் ஆட்டோகிராப், செல்பி, எடுத்து தள்ளுகிறார்கள்.

படையெடுக்கும் வட மாநிலத்தவர்.. நிறம் மாறும் தமிழகம்.. குக்கிராமத்திலும் கியாரே.. குர்குரே! படையெடுக்கும் வட மாநிலத்தவர்.. நிறம் மாறும் தமிழகம்.. குக்கிராமத்திலும் கியாரே.. குர்குரே!

அப்படித்தான் நேற்றுகூட சண்டிகரில் மனைவிக்காக வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரித்தார் அனுபம்கெர். அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க, திடீரென ஒரு கடைக்குள் நுழைந்து, மனைவிக்கு ஓட்டு போடும்படி கேட்டார். உடனே அந்த கடைக்காரர், தடாலடியாக ஒரு காகிதத்தை எடுத்து அனுபம்கெரிடம் நீட்டினார். அது வேறு ஒன்றுமில்லை.. 2014-ல் பாஜகவின் தேர்தல் அறிக்கையேதான்.

அதை அனுபம் கெரிடம் நீட்டிய கடைக்காரர், "பாஜக ஆட்சிக்கு வந்து 5 வருஷமாச்சு. இதுல இதுவரை எத்தனை வாக்குறுதிகள் நிறைவேறி இருக்கு?" என்று கேட்டார்.

இப்படி ஒரு கேள்வியை அனுபம் கெர் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை. கடைக்காரருக்கு என்ன பதில் சொல்வதென்று திணறிய அனுபம் கெர், வெடுக்கென கடையை விட்டு கடகடவென வெளியேறிவிட்டார்.

English summary
The shopkeeper asked Actor Anupam Kher about the BJP's election manifesto in Chandigarh Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X