• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோஹ்லி செய்த காரியத்துக்காக ரசிகர்களிடம் சிக்கி "ஃபிரை" ஆன அனுஷ்கா!

|

சென்னை: இந்த ஹோக்லி ஒரு ரன்ல பெவிலியனுக்கு போனாலும் போனார்... சிக்கியது அனுஷ்காதான்... நேற்று மாலையில் இருந்து போட்டு வறுத்து எடுத்துவிட்டார்கள் வலைஞர்கள்.... ஃபேஸ்புக், ட்விட்டரில் எங்கும் அனுஷ்கா எதிலும் அனுஷ்காதான்.

அதிலும் கோஹ்லியை கிண்டல் செய்ய கோழியை தோல் உறித்து கேஸ் ஸ்டவ்வில் போட்டு சுடுவது போல போட்டோ போட்டு கொடுமை படுத்திவிட்டார்கள்

டென்சன் ஹோக்லி

டென்சன் ஹோக்லி

உலகக் கோப்பை அரையிறுதியில் 329 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தும் நிலையில், விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. விராத் கோஹ்லி நேற்று டென்சனாகவே வந்தார். எதிர்கொண்ட பந்துகள் அனைத்தையும் மிஸ் செய்த அவர் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அனுஷ்கா முகாம்

அனுஷ்கா முகாம்

உலகக் கோப்பை போட்டிகளில் மிக முக்கியமான ஆட்டமான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதிய போட்டியைக் காண நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சிட்னியில் முகாமிட்டார்.

திரும்பிய கோபம்

திரும்பிய கோபம்

கிரிக்கெட் போட்டிகளில் அதிர்ஷ்டத்தை நம்பும் சிலர், அனுஷ்கா ஷர்மா சிட்னி மைதானத்தில் தரை இறங்கியதால், அனுஷ்கா வந்திருக்காக... அண்ணே கோஹ்லி ரன் அடிப்பாக.... என்று காலை முதலே பதிவிட்டனர். ஆனால் கோஹ்லியின் ஆட்டம் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமையவே அனைத்து கோபமும் அனுஷ்கா பக்கமே திரும்பியது.

ட்விட்டரில் அனுஷ்கா ஷர்மாவுக்கு எதிராக குவித்து வசைபாடத்துவங்கிவிட்டனர். அனுஷ்கா சிட்னியில் இருப்பதாலே, கோஹ்லி தனது ஆட்டத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்ற வகையில் இவர்களது விமர்சனங்கள் இடம்பெற்றன.

கவனச் சிதறல்

பெண் ஒருவரின் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, கவனச் சிதறலும் தான். என்று ஜியா என்பவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனக்கு அப்பவே தெரியும். சிட்னிக்கு அனுஷ்கா சென்றது ரொம்ப மோசமான ஐடியா என்கிறார் சிஸி மான். நானும் அப்பவே சொன்னேன்.

லக்கேஜை பேக் பண்ணுங்கப்பா

அனுஷ்கா வந்திட்டாக எப்பா எல்லாரும் லக்கேஜை பே பண்ணுங்கப்பா என்று கூறியுள்ளார் ஒருவர்

5 நிமிஷத்துல வந்துறனும்

5 நிமிஷத்துல வந்துறனும்

விராத் பேட் எடுக்கும் போதோ போன் செய்த அனுஷ்கா... 5 நிமிஷத்தில திரும்பி வந்திடணும் என்று கூறியதாக கருத்திட்டுள்ளார் சிராக் என்பவர்.

ஆஸ்திரேலியாவின் சதி

கோஹ்லியின் கவனம் இன்று சிதறிவிட்டது என்று கூறியுள்ளார் விஷாலி மோத்தா. கோஹ்லியின் கவனத்தைச் சிதற வைக்க ஆஸ்திரேலியாக்காரங்க வேண்டுமென்றே கேமராவை அனுஷ்கா பக்கம் திருப்புறாங்க என்று கூறியுள்ளார் கார்த்திகா.

படம் பார்க்க மாட்டேன்

அனுஷ்கா, நீங்க NH10 படம் நடிச்சீங்க. ஆனா, உங்க விராத் 10 கூட அடிக்கலேயேமா என்று ஆதங்கப்பட்டுள்ளார் பிரியங்கா. அனுஷ்கா, இப்போது நீங்க கோஹ்லியுடன் ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் போகலாம் என்று கூறியுள்ளார் டான். அதைவிட ஒருவரோ இனி நான் அனுஷ்கா சர்மாவின் படமே பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் எதிரியா?

இந்தியாவின் எதிரியா?

ஆனால் சிலரோ இதற்கு மறுப்பு தெரிவித்து அனுஷ்காவிற்கு ஆதரவாகவும் பதிவிட்டனர். அனுஷ்கா ஷர்மாவை திடீரென இந்தியாவின் எதிரி போல பார்க்கிறீர்களே? என்று இம்ரான் கான் என்பவர் பதிவிட்டுள்ளார்.

மோசமான நாள்

மோசமான நாள்

அனுஷ்காவை மீது குறை சொல்வதை நிறுத்துங்கள். ஒவ்வொரு வீரருக்கும் மோசமான நாள் இருக்கும். அமைதியாக இந்தியாவுக்கு ஆதரவு அளியுங்கள் என்பது காயத்ரியின் கருத்தாகும்.

தவறான கண்ணோட்டம்

தவறான கண்ணோட்டம்

அனுஷ்காவை திட்டும் உங்கள் அனைவரையும் நான் ப்ளாக் செய்கிறேன். தவறான நோக்கத்தோடு அனுஷ்காவை ட்ரெண்ட் செய்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் அனுஷ்கா சூப்பர் ஃபேன்.

அனுஷ்கா என்ன பண்ணும்

அனுஷ்கா என்ன பண்ணும்

"தென்னை மரத்தில் தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டின" கதையாக கிரிக்கெட் போட்டியில் ஹோக்லி சரியா ஆடலைன்னா அனுஷ்கா என்னப்பா பண்ணும்... அதை போட்டு இந்த தாளிப்பு தாளிக்கிறீங்களே... கோஹ்லி நூறு அடிச்சா யாராவது ஸ்வீட் பாக்ஸ் கொண்டுபோய் அனுஷ்காவுக்கு கொடுப்பாங்களா என்ன? விளையாட்டை விளையாட்டா பாருங்கப்பா...

 
 
 
English summary
When Indian vice captain Virat Kohli went out to bat against Australia in the World Cup semi finals, all eyes were on him. But he could not live upto the expectations and got out cheaply at 1. But his girflriend Anushka Sharma, who was among the spectators at the Sydney Cricket Ground, became the target of twitterati.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X