For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தப்புமா?.. கவிழுமா?... வெள்ளிக்கிழமை மத்திய அரசின் தலைவிதி தெரியும்

4 ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற போது இருந்த பலத்தை விட லோக் சபாவில் பாஜகவின் பலம் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வெள்ளிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்கும் பாஜக அரசு?- வீடியோ

    டெல்லி: 4 ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற போது இருந்த பலத்தை விட லோக் சபாவில் பாஜகவின் பலம் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. இதனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பாஜகவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.

    லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றார். இந்த தீர்மானம் மீது வரும் வெள்ளிகிழமை விவாதம் நடக்கிறது.

    எப்போது விவாதம்

    எப்போது விவாதம்

    50க்கும் அதிகமான கட்சிகள் தீர்மானத்தை ஏற்றுகொண்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றார். இந்த தீர்மானம் மீது இந்த தீர்மானம் மீது வரும் 20ம் தேதி விவாதம் நடக்கிறது. இதனால் டெல்லி அரசியலில் இப்போதே பரபரப்பு கூடியுள்ளது.

    ஏற்கனவே கொண்டு வந்தது

    ஏற்கனவே கொண்டு வந்தது

    ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அப்போது கடைசிவரை அவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த முறை முதல் நாளே ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. 2003ல் வாஜ்பாய் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின் இப்போதுதான் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    குறைந்து இருக்கிறது

    குறைந்து இருக்கிறது

    மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். 30 வருடங்களுக்கு பின் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது தொடர் தோல்விகளால் பெரும்பான்மையை இழந்து கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் நடந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கட்சி படுதோல்வி அடைந்தது.

    என்ன கணக்கு

    என்ன கணக்கு

    மெஜாரிட்டிக்கு 272 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சியின் பெரும்பான்மை மொத்தமாக குறைந்து, பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. தற்போது பாஜக கட்சியின் பலம் 271 ஆக இருக்கிறது. மொத்தமாக அவைத்தலைவரையும் சேர்த்து 271 பேர் தான் இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு 272 பேர் தேவை.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறும் என்றே கூறப்படுகிறது. ஏதாவது கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சனை பாஜக பெரிய கட்சி இல்லை என்ற உணர்வை மக்கள் மத்தியில் கொடுக்கும். இதற்காகவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Lok Sabha Speaker Sumitra Mahajan accepts the No Confidence Motion moved by opposition parties, including Congress and TDP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X