For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது தெலுங்கு சினிமாவை விட பயங்கரமா இருக்கே.. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 5 து.மு.!

Google Oneindia Tamil News

Recommended Video

    Jagan Mohan Reddy : Stalin: விஜயவாடாவில் திக்குமுக்காடிய மு.க ஸ்டாலின், உதயநிதி!- வீடியோ

    அமராவதி: சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து புரட்சி செய்துள்ளார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

    மாநிலங்களில் முதல்வர் பதவிதான் பிரதானமானது. இருப்பினும் உட்கட்சி மோதல்கள், கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்காக துணை முதல்வர் பதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    அரசியல் சாசனப்படி முதல்வருக்குத்தான் அதிகாரம். துணை முதல்வர் என பதவி வகித்தாலும் ஒரு அமைச்சருக்கான அதிகாரங்கள்தான் அவருக்கும் உண்டு.

    மாநிலங்களில் துணை முதல்வர் பதவிகள் என்பது அண்மைக்காலமாக வழக்கமான ஒன்றாகிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது.

    குடும்ப சண்டைக்காக துணை முதல்வர் பதவி

    குடும்ப சண்டைக்காக துணை முதல்வர் பதவி

    முதல்வராக இருந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி மத்திய அமைச்சரானார். இதனால் இளையமகனும் அமைச்சர் பதவி வகித்தவருமான மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் கருணாநிதி. அதுவும் டெல்லியில் இருந்து அழகிரி சென்னை வந்து சேருவதற்குள் ஸ்டாலினை துணை முதல்வராக்கி அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தார் கருணாநிதி. பின்னர் அதிமுக ஆட்சியில் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படவில்லை.

    ஆந்திராவில் ஜாதி அடிப்படையில் 5 துணை முதல்வர்கள்- ஜெகன் மோகன் அதிரடிஆந்திராவில் ஜாதி அடிப்படையில் 5 துணை முதல்வர்கள்- ஜெகன் மோகன் அதிரடி

    ஓபிஎஸ் துணை முதல்வர்

    ஓபிஎஸ் துணை முதல்வர்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். அதிமுகவின் இந்த இரு அணிகளும் இணைந்த போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. தற்போதும் துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ், முதல்வர் அளவுக்கு அதிகாரம் இல்லையே என குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்.

    ஜெகன் சாதனை

    ஜெகன் சாதனை

    கோவா, அருணாச்சல பிரதேச மாநிலங்களில் 2 துணை முதல்வர்கள் பதவி வகித்தும் இருக்கின்றனர். தற்போதும் 2 துனை முதல்வர்கள் இருக்கின்றனர். இதுதான் இதுவரையான துணை முதல்வர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இதையும் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி முறியடித்து 5 துணை முதல்வர்களை ஜாதிய அடிப்படையில் நியமித்திருக்கிறார்.

    14 துணை முதல்வர்கள்

    14 துணை முதல்வர்கள்

    தற்போது அருணாச்சல பிரதேசம், டெல்லி, குஜராத், பீகார் கர்நாடகா, ராஜஸ்தான், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் என 14 மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர். இருப்பினும் ஜாதிய அடிப்படையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் துணை முதல்வர் பதவி நியமனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Andhra Pradesh will have Five Chief Minister with CM Jagan Mohan Reddy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X