For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எலெக்சன் கமிஷன் செஞ்சது நியாயமே இல்லை, கொதித்து எழுந்த சந்திரபாபு நாயுடு தர்ணா

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈவிஎம் இயந்திரத்தில் கோளாறு.. ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த சந்திரபாபு நாயுடு கோரிக்கை- வீடியோ

    அமராவதி: தேர்தல் ஆணையம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, ஆந்திர தலைமை தேர்தல் அலுவலகம் முன்பு தொண்டர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர ஆந்திராவின் டிஜிபி, உள்பட முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரசின் கோரிக்கை ஏற்று உடனே மாற்றப்பட்டுள்ளார்கள்.

    எனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக் எனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக்

    கொதித்த நாயுடு

    கொதித்த நாயுடு

    இதனால் கொதித்து போய் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகம் முனபு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    வதறான செயல்

    வதறான செயல்

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தேர்தல் ஆணையம், எந்த காரணமும் இன்றி திடீரென ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் புகாரை ஏற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உடனே மாற்றி இருக்கிறது. இதற்காக எந்த விளக்கமும் எங்களிடம் கேட்கவில்லை.

    ஏற்க முடியாது

    ஏற்க முடியாது

    பாரதிய ஜனதா கட்சியுடன் மறைமுகமாக கூட்டணியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை ஏற்க முடியாது. இது போன்ற தவறான செயல்களை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என்றார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.

    நாயுடு கோரிக்கை

    நாயுடு கோரிக்கை

    இதனிடையே வாக்கு எந்திரம் பழுது காரணமாக தேர்தல் 3 மணி நேரத்துக்கு மேல் பல இடங்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சந்திரபாயு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    AP Chief Minister Naidu demands re-polling at locations where faulty EVMs marred voting and he also holds dharna in front of CEO office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X