For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெகன் மோகன் ரெட்டிக்கு குடும்பத்தில் இருந்தே புதிய சிக்கல்.. கோர்ட் படி ஏறிய தங்கை.. கொலை வழக்கு!

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்பத்தினரால் தர்ம சங்கடத்தை சந்தித்துள்ளார். தனது தந்தை கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று கோரி ஜெகனின் சித்தப்பா மகள் சுனிதா நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் தம்பியுமான விவேகானந்த ரெட்டி (68). இவர், கடப்பா மாவட்டம், புலிவெந்துலாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

விவேகானந்தரெட்டி கடந்த 1989 மற்றும் 94ம் ஆண்டில் புலிவெந்துலா தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார். இவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். விவேகானந்த ரெட்டி அரசியல் சம்பந்தமான விஷயங்களுக்காக கடப்பா வந்து தங்கி செல்வார். அப்படித்தான் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம்தேதி வந்து தங்கியிருந்தார்.அன்றைக்கு விவேகானந்தரெட்டி தனது வீட்டு கழிவறையில் 7 இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

இந்த படுகொலை குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி அமித்கான் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அன்றைக்கு ஆட்சியில் இருந்து சந்திராபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு நியமித்து இருந்தது.அப்போது பேசிய ஜெகன் மோகன் ரெட்டி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெலுங்கு தேசம் ஆட்சியில் இருப்பதால் போலீஸ் விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தெலுங்கு தேசம் கட்சியினர் மீது இந்த கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தர்ம சங்கடத்தில் ஜெகன்

தர்ம சங்கடத்தில் ஜெகன்

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகி கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டாவது முறையாக ஜெகனே சிறப்பு விசாரணை குழுவும் அமைத்தார். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவரது தங்கை சுனிதா ரெட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது ஜெகன் மோகன் ரெட்டிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலர் மீது சந்தேகம்

பலர் மீது சந்தேகம்

விவேகானந்தா ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி தனது தந்தையின் மரணம் நீதிமன்றத்தை நாடுவது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ஆவேசத்துடன் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் மட்டுமில்லாமல் தனது குடும்ப உறுப்பினர்களை கூட விட்டுவைக்கவில்லை, பலர் மீதும் சந்தேகம் தெரிவித்தார்.

ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் பரபரப்பு

சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வரும் என்று சொன்ன ஜெகன் மோகன் ரெட்டி, ஏன் ஆட்சிக்கு வந்த உடன் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை என்றும் சுனிதா கேள்வி எழுப்பினார். அத்துடன் தனது தந்தை மரணம் குறித்து இரண்டாவது எஸ்.ஐ.டி ஏன் அமைக்கப்பட்டது என்றும் இப்போது கூடுதல் போலீஸ் டிஜிபிக்கு பதிலாக காவல்துறை கண்காணிப்பாளரால் ஏன் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
AP CM Jagan Reddy Faces Trouble From Family, Cousin Goes To Court Over her father Vivekananda Reddy murder
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X