For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிக்கிழமை வந்துருச்சா.. எல்லாத்தையும் தூக்கி போடுங்க.. ஹேப்பியா இருங்க.. ஜெகன் மோகன் செம ஆர்டர்

பள்ளி மாணவர்களுக்கு ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

விஜயவாடா: ஆந்திராவில் பள்ளி குழந்தைகள் எல்லாம் துள்ளிக்குதித்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அந்த மாநில முதல்வர் அப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அபார வெற்றி பெற்றுள்ளார். இவரது அப்பா இறந்து வருஷம் ஆனாலும், கடுமையான உழைப்புக்கு பிறகுதான் இவருக்கு முதல்வர் பதவி வந்து சேர்ந்துள்ளது.

AP CM Jagan Mohan Reddy has ordered that No School bag on Saturdays

கடந்த மாதம் 30-ம் தேதி அம்மாநில முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். முதல் கையெழுத்தே முதியோர் நலனுக்கானதுதான். அதாவது உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து 2,300 ரூபாய் அதிகரித்து மக்களின் அபார பாராட்டை பெற்றுவிட்டார். இது இன்னும் கொஞ்ச நாளில் 2500 ரூபாய் உயர போகிறதாம்!

முதியோர்களை அடுத்து, மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, சனிக்கிழமைகளில், மாணவர்கள் ஸ்கூல் பையை கொண்டு வர தேவையில்லையாம். அதாவது ஒவ்வொரு சனிக்கிழமையும், படிப்பு அல்லாத பிற திறன்கள், விளையாட்டுக்காக மட்டுமே மாணவர்கள் செலவழிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் முதல்வர்.

தண்ணீர் தருவோம் என்று கூறி விட்டு பல்டி அடித்த கர்நாடகா.. காவிரி நீரைத் தர மறுத்து அடாவடி!தண்ணீர் தருவோம் என்று கூறி விட்டு பல்டி அடித்த கர்நாடகா.. காவிரி நீரைத் தர மறுத்து அடாவடி!

அதுமட்டுமில்லை, மாணவர்களின் புத்தகப் பையின் எடையைகூட கூடிய சீக்கிரம் குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறாராம். இதெல்லாம் எதற்காக என்றால், மதிப்பெண்கள் பின்னாடியே மாணவர்கள் ஓடுகிறார்கள் என்பதால்தான். எப்பவுமே தோளில் புத்தக மூட்டையுடன் சுமந்து வரும் மாணவர்கள், முதல்வரின் இந்த அறிவிப்பை கேட்டதும் ஒரே குஷியாகிவிட்டனர்.

English summary
AP CM Jagan Mohan Reddy has ordered that students to get one day relief from carrying school bags on Saturdays
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X