For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசி நேரத்தில் பெண் வழக்கறிஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. புனேவில் அதிசயம்!

ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கை காரணமாக புனேவில் பெண் ஒருவரின் வாழ்க்கை கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

புனே: ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கை காரணமாக புனேவில் பெண் ஒருவரின் வாழ்க்கை கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பெண் சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயத்தின் வேகத்தை கணக்கிட்டு அதன் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது இந்த ஆப்பிள் வாட்ச். தற்போது இந்த ஆப்பிள் வாட்சை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்காக அவர் ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு அவர் அந்த ஆப்பிள் வாட்சை வாங்கியதாக கூறியுள்ளார்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் இப்போது உலகம் முழுக்க பிரபலம் . இதன் விலை மிகவும் அதிகம் என்றாலும், இந்தியாவிலும் இதை பலர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆப்பிள் வாட்சில் இருக்கும் ''ஹார்ட் வாட்ச்'' என்ற அப்ளிகேஷன் இதய வேகத்தை கணிக்க உதவும். இந்த அப்ளிகேஷனை வடிவமைத்த டேவிட் வால்ஷ் என்பவர் தன்னுடைய அப்பாவின் நினைவாக இதை வடிவமைத்துள்ளார்.

பயன்படுத்தி வந்தார்

பயன்படுத்தி வந்தார்

இந்த வாட்சை புனேவை சேர்ந்த வழக்கறிஞரின் ஆரத்தி கோஹெல்கார் என்ற பெண் வாங்கியுள்ளார். பல நாட்களாக அந்த வாட்சை காரணமே இல்லாமல் கையில் கட்டி இருந்திருக்கிறார். அந்த வாட்ச் மூலம் தினமும் தன்னுடைய உடல்நிலை, இதயத்துடிப்பு எல்லாவற்றையும் கண்காணித்து வந்துள்ளார். மேலும், வழக்கறிஞர் என்பதால் எப்போதெல்லாம் இதயம் மோசமாகிறது என்பதை கவனித்து வந்துள்ளார்.

உயிருக்கு பாதிப்பு

உயிருக்கு பாதிப்பு

இதையடுத்து இரண்டு வாரம் முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் எப்போதும் போல் அல்லாமல் திடீரென்று அவரது இதயத்தை வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் அலுவலக பிரச்சனை காரணமாக மோசமான மனநிலையில் இருந்திருக்கிறார். இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து இவருக்கு சந்தேகம் வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது.

ஆப்பிளுக்கு நன்றி

ஆப்பிளுக்கு நன்றி

இந்த நிலையில் வேகமாக மருத்துவமனைக்கு சென்றதால் இவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன சிஏஓ டிம் கூக்கிற்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் மூலம் இப்படி சிலர் காப்பாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Apple Watch notification saves a woman’s life, called Arati Joglekar, 53 in Pune. She called doctor after found high rate of heart beating in watch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X