For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வங்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிக்கிம் செல்ல முடியாமல் தவித்த ஏ.ஆர். ரகுமான்

மேற்கு வங்கத்தின் பக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து மோசமான வானிலையால் ஹெலிகாப்டரில் சிக்கிம் தலைநகர் காங்டாக் செல்ல முடியாமல் தவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்.

By Mathi
Google Oneindia Tamil News

காங்டாக்: மேற்கு வங்கத்தின் பக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து மோசமான வானிலையால் ஹெலிகாப்டரில் சிக்கிம் தலைநகர் காங்டாக் செல்ல முடியாமல் தவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்.

சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.ஆர். ரகுமான். சிக்கிம் மாநில அரசின் குளிர்கால திருவிழா நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் இதை அறிவித்தார்.

AR Rahman reaches Gangtok through road

இதில் ஏ.ஆர். ரகுமானும் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கத்தின் பக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து சிக்கிம் தலைநகர் காங்டாக் செல்ல ஏ.ஆர் ரகுமானுக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் மோசமான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டரில் ஏ.ஆர். ரகுமான் செல்லவில்லை. இதையடுத்து பக்டோராவில் இருந்து சாலை மார்க்கமாக சுமார் 4 மணிநேரம் பயணித்து காங்டாக்கை சென்றடைந்தார் ஏ.ஆர். ரகுமான்.''

English summary
Music Maestro AR Rahman was scheduled to reach Gangtok in Sunday morning in a Choppoer from Bagdogra airport, West Bengal. But Due to inclement weather condition he travelled to Gangtok through road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X