For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமியார் ராம்பாலின் ஆசிரம ரகசிய அறையில் பெட்ரோல் குண்டுகள்: குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சண்டிகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தின் இரண்டு ரகசிய அறைகளில் ஏராளமான துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள் என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குளு குளு அறைகள், மசாஜ் படுக்கைகள், நீச்சல் குளம், பிரம்மாண்ட டி.வி. திரைகள், குண்டு துளைக்காத பூஜை அறை, உடற்பயிற்சிக் கூடம், நகைப் பெட்டகங்கள் என அரண்மனைக்கு இணையான சொகுசு வசதிகளுடன் கூடியதாக சாமியாரின் அரண்மனை திகழ்ந்துள்ளது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.

Arms, Petrol Bombs, Pregnancy Strip Found in Rampal's Ashram

கடந்த 2006-ல் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக 43 முறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாமல் 3 முறை பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் முரண்டுபிடித்த ஹரியாணா மாநில சாமியார் ராம்பாலை அந்த மாநில போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.

அப்போது போலீஸாருக்கும் சாமி யாரின் ஆதரவாளர்களும் இடையே நடைபெற்ற கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவரது ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சாமியார் ராம்பால்

சாமியார் ராம்பால் 1999-ல் சட்லக்கில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா பகுதிகளிலும் ஆசிரமங்களை அமைத்தார். இதில் சட்லக் ஆசிரமம், சண்டிகர்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 12 ஏக்கர் பரப் பளவில் 5 மாடிகளுடன் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ளது.

அரண்மனைக்கு நிகரான வசதிகள்

ஆசிரம வளாகம் முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு சாமியார் ராம்பாலுக்காக பல்வேறு தனி அறைகள் உள்ளன. அவற்றில் குளிர்சாதன வசதி, மசாஜ் படுக்கைகள், பிரம்மாண்ட டி.வி. திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆசிரமத்துக்குள் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், 25 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளம், 24 குளிர் சாதன அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகைப் பெட்டகங்கள்

ராம்பாலுக்காக பிரத்யேகமாக பூஜை அறை உள்ளது. இங்கு பெண் பக்தர்களுக்காக தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பூஜை அறை அருகே நகைப் பெட்டகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட மைதானம் உள்ளது. இங்குள்ள உயரமான மேடையில் குண்டு துளைக்காத கூண்டில் இருந்து ராம்பால் சொற்பொழிவாற்றுவார். அவரது உரையைக் கேட்க வசதியாக ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

50000 பேர் தங்கலாம்

ஆசிரமத்தில் 50,000 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு சமைக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சமையல் அறை உள்ளது. இங்கு ஒரு மாதத்துக்கு தேவையான சமையல் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக் கூடம் உள்ளது. ஆசிரமத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குண்டு துளைக்காத கார்

வெளியில் செல்வதற்காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார்களை ராம்பால் பயன்படுத்தியுள்ளார். அவரின் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ படை இருந்துள்ளது. சாமியாரின் கமாண்டோ படை வீரர்கள் தங்குவதற்காக தனி அறைகளும் உள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

ஆசிரமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாத வகையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரம வாயிலில் 4 மெட்டல் டிடெக்டர் கதவுகள் உள்ளன. அதன்வழியாகவே பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

ரகசிய ஆயுதக் கிடங்கு

ஆசிரமத்தின் இரண்டு ரகசிய அறைகளில் ஏராளமான துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள் என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஹெல்மெட், கைத்தடிகள், கருப்பு நிற சீருடைகள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அங்குள்ள 2 டேங்க்குகளில் 800 லிட்டர் டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிகள் அனைத்திலும் தோட்டாக்கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

865 பேர் கைது

ஆசிரமத்தில் இருந்த 15000 பேரை வெளியேற்றிவிட்டு சாமியாரை போலீசார் கைது செய்தனர். தற்போது சட்லக் ஆசிரமம் தற்போது பாலைவனம்போல் காட்சியளிக்கிறது. ஆசிரமத்தில் சிறிய ராணுவத்துக்கு தேவையான வகையில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்துள்ளனர். சாமியாரை கைது செய்யவிடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் ரகசிய ஆயுதக் கிடங்கு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு

சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தில் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரும் தங்கியிருந்தார். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆசிரமத்துக்கும் மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கர்ப்ப சோதனை கருவிகள்

சாமியார் ராம்பாலின் ஆசிரமத்துக்கு பெண் பக்தர்கள் ஏராளமாக வந்துள்ளனர். இந்நிலையில் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் வெளிப்புறமாக பூட்டப் பட்ட குளியல் அறையில் பெண் ஒருவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் மத்தியப் பிரதேசம் அசோக் நகரைச் சேர்ந்த பிஜிலேஜ் என தெரியவந்துள்ளது.

English summary
A huge cache of arms and ammunition, petrol bombs, acid syringes, a chilli grenade and a pregnancy test strip were found inside the highly-fortified Satlok Ashram from where controversial guru Rampal was arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X