For Daily Alerts
உ.பி.யில் ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் பலி
பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பரேலியில் விமானப்படை பயிற்சி முகாம் உள்ளது. இங்கு இன்று காலை ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதில் விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் நகாதா ஆற்றின் மீது பறந்து சென்றபோது திடீர் என்று விபத்துக்குள்ளாகி ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் 3 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள். பைலட் உள்பட 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.