For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது ஸ்கூல்.. தொழிற்சாலை.. வேலை.. வாழ்க்கையை மாற்றும் பலநன்மை இருக்கு.. காஷ்மீரில் ராணுவம் போஸ்டர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Cellphone Service restored in 5 districts in Jammu Kashmir

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் விளையப்போகும் நன்மைகள் குறித்து கடந்த சில நாள்களாக தெற்கு காஷ்மீர் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியும், நோட்டீஸ்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது நமது இந்திய ராணுவம்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. முன்னதாக இந்த அறிவிப்பை செய்யும் முன் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, தொலை தொடர்பு சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வதந்திகள் மற்றும் வன்முறைகள் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது.

    தொலை தொடர்பு சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வதந்திகள் மற்றும் வன்முறைகள் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது.

    புகழேந்தி பேசறதை பார்த்தால்.. வேறு கட்சிக்கு போவது போல தான் உள்ளது.. வெற்றிவேல் காட்டம்புகழேந்தி பேசறதை பார்த்தால்.. வேறு கட்சிக்கு போவது போல தான் உள்ளது.. வெற்றிவேல் காட்டம்

    வன்முறை சம்பவங்கள் இல்லை

    வன்முறை சம்பவங்கள் இல்லை

    அதன்பிறகு காஷ்மீரில் எந்த விதமான பெரிய அளவிலான வன்முறை சம்வங்கள் நிகழவில்லை. தற்போது அமைதியாக காணப்படும் காஷ்மீரில் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் காஷ்மீரில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது

    370 ரத்தால் நன்மைகள்

    370 ரத்தால் நன்மைகள்

    காஷ்மீர் மாநிலம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திநிறுவனம் இன்று வெளியிட்டு இருந்த செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்படப்போகும் நன்மைகள் குறித்து அம்மாநில மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை ராணுவம் செய்து வருகிறது. இதன்படி காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து தெற்கு காஷ்மீர் பகுதி முழுவதும் உருது மொழியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. மக்களிடமும் நன்மைகள் எடுத்து சொல்லப்படுகிறது.

    புதிய பள்ளிகள் திறக்கப்படும்

    புதிய பள்ளிகள் திறக்கப்படும்

    ராணுவத்தினர் ஒட்டியிருந்த உருது மொழி போஸ்டரில், புதிய கோச்சிங் சென்டர்கள், புதிய பள்ளிகள், திறக்கப்படும், புதிய ஓட்டல்கள் கட்டப்படும், மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ், மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். மேலும் ரியல் எஸ்டேட் மதிப்பு (சொத்து மதிப்பு) காஷ்மீரில் அதிகரிக்கும்.

    வேலைகள் கிடைக்கும்

    வேலைகள் கிடைக்கும்

    புதிய தொழிற்சாலைகள் வரும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலைகள் கிடைக்கும். காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் இனி அவர்களுக்கும் சொத்தில் சம உரிமை கிடைக்கும் என்பது குறித்து போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளில் பெரும்பாலானவை மக்களால் அகற்றப்பட்டாலும், சில மூடப்பட்ட கடையின் முன்பும் அல்லது காலியாக உள்ள கட்டிடங்களிலும் இன்னமும் உள்ளது என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    English summary
    Indian Army has put up and distributed posters in parts of South Kashmir, explaining to the local people the benefits of abrogation of Article 370.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X