For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ வீரர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை... காஷ்மீரில்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்பூரா மாவட்டத்தில் 13-வது சீக்கிய ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர் குல்தீப் சிங். கன்ஸால்வான் கிராமத்தில் உள்ள ரெஜிமண்ட் தலைமையத்திற்கு நேற்று சென்ற குல்தீப், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னுடைய துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Army jawan commits suicide by shooting himself in Bandipora

இதைக் கண்டு அங்கிருந்த மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குல்தீப் சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குல்தீப் சிங்கின் இந்த துயர முடிவிற்கான காரணம் தெரியவில்லை என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
An army jawan allegedly committed suicide by shooting himself with his service weapon in north Kashmir’s Bandipora district, police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X