For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே பிரசவித்த தாயையும் சேயையும் 6 கி.மீ. ராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. கடுமையாக கொட்டிய பனிமழையால் அப்பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.

Army jawans carry woman with newborn child 6 km amid heavy snowfall

இது தொடர்பாக ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர்கள் பனிமழைக்கு நடுவே தாயையும் குழந்தையும் ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொண்டு சுமார் 6 கி.மீ. தொலைவு நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யபட்டு வருகிறது.

English summary
Indian Army personnel carried a woman, who was stuck at a hospital with her newborn child due to heavy snowfall, on a stretcher for almost 6-km.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X