For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் நிலவரம்- ஷேக்லா ரஷீத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை: ராணுவம் திட்டவட்ட மறுப்பு

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக மக்கள் இயக்கத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ஷேக்லா ரஷீத் முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக ஷேக்லா ரஷீத் நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் 10 குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகள்:

 Army rejects Shehla Rashids allegations on Jammu and Kashmir

ஶ்ரீநகர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களுக்கு உள்ளூர் மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிவாயு நிரப்பும் நிலையங்கள் இரவு 7 மணிக்கு மேல் திறக்கப்படுகின்றன. நகரப்பகுதிகளில் மட்டும் பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் சில இடங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் திறந்துள்ளன. மக்களை சந்திக்க முடியாத அளவுக்கு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சிலரது வீடுகளுக்கு ஆட்களை நேரில் அனுப்பிதான் நிலைமைகளை விசாரிக்க் வேண்டியுள்ளது.

டி2ஹெச் டிவி இணைப்புகள் முடிவடைந்தாலும் வெளிமாநிலங்களில் இருந்துதான் ரீ சார்ஜ் செய்ய முடிகிறது. சுகாதார வசதிகளை மேற்கொள்ள வெவ்வேறு மாவட்டங்களுக்கு அதிகாரிகள் சென்று வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் சட்டம் ஒழுங்கானது போலீசார் கட்டுப்பாட்டில் இல்லை. அனைத்தும் துணை ராணுவப்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து இளைஞர்களை ராணுவம் கைது செய்து சூறையாடுகிறது.

சோபியானில் 4 பேர் விசாரணை என்ற பெயரில் ராணுவ முகாமில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சித்திரவதையை அனுபவிக்கும் குரலை மைக்கில் கேட்குமாறும் ஏற்பாடு செய்திருக்கின்றன்னர். இவ்வாறு அடுத்தடுத்து ஷேக்லா ரஷீத் ட்வீட்டரில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ஷேக்லா ரஷீத்தின் அத்தனை குற்றச்சாட்டுகளுமே ஆதாரமற்றது என ராணுவத் தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. ஷேக்லா ரஷீத்தின் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் பொய்யான செய்திகள் திட்டமிட்டே பரபரப்பப்படுகின்றன என்றும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Our Army rejected Jammu and Kashmir People's Movement leader Shehla Rashid's allegations regarding situation in Jammu and Kashmi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X