For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருங்கால தலைமுறையை அழிக்கும் எமனாக நீட்- ஆந்திரா, தெலுங்கானாவில் 50 'அனிதாக்கள்’ தற்கொலை!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்திருக்கிறது. நீட் தேர்வால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாகக் கருதி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நீட் தேர்வால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிளஸ் டூ தேர்வில் 95% மதிப்பெண்கள் பெற்ற சம்யுக்தா என்கிற மாணவி. இவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவின் காரணமாக, கஷ்டப்பட்டு லட்சத்தில் கடன் வாங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனியார் கோச்சிங் சென்டரில் சேர்த்து இருக்கிறார் அவரது தந்தை. ஆனால், கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார் சம்யுக்தா.

அவரது மரணக் கடிதத்தில், ' என்னால் மருத்துவர் ஆக முடியுமா என்கிற பயம் தன்னை அலைக்கழிக்கிறது. அதனால் தான் இந்த முடிவு' என்று பதிவு செய்துள்ளார். எனது மகள் எப்படியாவது மருத்துவர் ஆகிவிடுவேன் இந்த மக்களுக்கு அப்போது தான் நல்லது செய்ய முடியும் என்று அடிக்கடி சொல்லுவார். கடந்த சில நாட்களாக இந்த கோச்சிங் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

பாடத்திட்டம் வேறானவை

பாடத்திட்டம் வேறானவை

இதுவரை படித்த பாடத்திட்டமும் இதுவும் வேறுவேறாக உள்ளது என்று நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், இப்போது என் மகளை இழந்துவிட்டேனே. இப்படி எளிய மக்களின் பிள்ளைகளை காவு வாங்கும் தேர்வு அவசியமா? என்று கதறுகிறார் அவரது தந்தை.

50-க்கும் மேற்பட்டோர் தற்கொலை

50-க்கும் மேற்பட்டோர் தற்கொலை

இப்படி ஆந்திரா தெலுங்கானாவில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.

பிரச்சனை புரிகிறது

பிரச்சனை புரிகிறது

இது அனைத்திற்கும் காரணம் நீட் தேர்வு குறித்து அவர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தம் தான் என குழந்தைகளுக்கான செயற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுகுறித்து அஷ்யத ராவ் என்கிற செயற்பாட்டாளர் கூறியதாவது, ' இந்த இரண்டு மாநிலங்களும் இப்போது தான் இந்த பிரச்னையின் வீரியத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பள்ளிகள் மீது நடவடிக்கை

பள்ளிகள் மீது நடவடிக்கை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பள்ளிகளும், கல்லூரிகளும் எட்டு மணி நேரம் தான் இயங்க வேண்டும் என்றும், உடல் மற்றும் மனரீதியான தாக்குதல்களை விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அமல்படுத்தி இருக்கிறார்'. மேலும் தற்கொலைக்கு தூண்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை மூடப்பட்டால் தான் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த அரசின் திட்டமல்ல இந்தத் தேர்வு இது குழந்தைகளின் மீது ஏவப்பட்ட வன்முறை என்றும் விமர்சித்து இருக்கிறார்.

ஆலோசனை தர வேண்டும்

ஆலோசனை தர வேண்டும்

'மாணவர்களுக்கு போட்டித் தேர்வின் மீதான கொடுக்கப்படும் அழுத்தம் தான் அவர்களை இந்த நிலையில் கொண்டு வந்து வைத்திருக்கிறது. கல்வி நிறுவனங்கள், அரசு, ஆசியரோடு இந்த தற்கொலைகளுக்கு பெற்றோருக்கும் இடம் இருக்கிறது' என்கிறார் உளவியல் நிபுணர் வீரபத்ர காண்ட்லா. உடனே இது போல மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இது மேலும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

English summary
In the last two months alone, more than 50 students have reportedly committed suicide across Telangana and Andhra Pradesh. Does neet is the readon behind this ? experts rising questions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X