For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியார் ஆற்றில் பெரு வெள்ளம்.. கொச்சி சர்வதேச ஏர்போர்ட்டுக்கு ஆபத்து.. பாதித்த விமான சேவை

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொச்சி: பெரியார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான வருகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையால் கேரளாவின் எர்ணாகுளம், மலப்புரம், வயனாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

Arrival operations at Cochin international airport stopped

இந்த நிலையில் பெரியார் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் அருகே அமைந்துள்ள கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமையான இன்று பகல் 1.10 மணி முதல் கொச்சி விமான நிலையத்திற்குள் வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. ஆய்வுகளுக்கு பிறகு மதியம் 3.05 மணிக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பித்தது.

Arrival operations at Cochin international airport resume after two hours

இடமலயார் அணையில் கூடுதலாக நான்கு மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாலும், இடுக்கி அணையில் இருந்து வெள்ளோட்ட அடிப்படையில் மதகு திறக்கப்பட்டதாலும், பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

English summary
The Cochin International Airport Limited (CIAL) stopped the arrival operations today in view of possible inundation in the airport area following a rising water level in the Periyar river. The CIAL is situated close to the river. "As a measure of precaution, we are stopping arrival operations from 1.10 pm today," a CIAL spokesperson said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X