For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஹாசிவராத்திரி தினம்: அமைதி நிலவ வேண்டி மணல் சிற்பம் தீட்டிய சுதர்சன் பட்நாயக்

மஹாசிவராத்திரி தினத்தில் அமைதி நிலவ வேண்டி இறைவனை பிராத்திப்போம் என்று மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தி ஒடிஷாவின் பூரி கடற்கறையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

 Artist sudarsand Pattnaik creates sand art on LordShiva on the eve of MahaShivratri

சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாசிவராத்தி தினத்தை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று தனது மனல் சிற்பத்தால் ஒடிஷாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

சுதர்சன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிஷா பூரி கடற்கரையில் தான் வடிவமைத்த சிவபெருமானின் மணல் சிற்பம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில் இந்த நாளில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அனைவரும் எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானை பிராத்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Artist sudarsansand creates sand art on LordShiva on the eve of MahaShivratri at Puri beach. He also says that all of us pray for Peace on MahaShivratri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X