For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபாவில் ஆளும் கட்சி குழு தலைவராக மத்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Arun Jaitley to be Leader of the House in Rajya Sabha

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தியதும், இரு அவைகளும் தனித்தனியே கூடின. ராஜ்யசபா துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி, தலைமையில் கூடியதும், அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஆளும் கட்சி தலைவராக ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக குலாம் நபி ஆசாத்தும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினரான ஜெட்லி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவையில் காங்கிரசுக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. அங்கு மல்லிகார்ஜுனகார்கே, காங்கிரஸ் கட்சி குழு தலைவராக செயல்படுகிறார்.

English summary
Arun Jaitley to be Leader of the House in Rajya Sabha, Ghulam Nabi Azad Leader of the Opposition announced Chairman Hamid Ansari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X