For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனோகர் பாரிக்கர் ராஜினாமா ஏற்பு.. அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத்துறை கூடுதல் பொறுப்பு

காலியாக உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கிறது. முதல்வராக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவியேற்கிறார். எனவே பாதுகாப்பு அமைச்சர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்தார். அதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து காலியாக உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

Arun Jaitley is new Defence Minister of India

கோவா முதல்வராக பாரிக்கர் நாளை பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ஜேட்லி வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். பட்ஜெட் தாக்கலின்போது கூட மிகவும் சிரமப்படுவார். ஹெலிகாப்டரில் ஏற முற்பட்டபோது தடுமாறி விழுந்து லேசான காயமடைந்துள்ளார். இந்நிலையில் முக்கியமான பாதுகாப்பு துறை அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது கவனிக்கக்தத்கது.

English summary
Arun Jaitley will be the Defence Minister of India. He will hold additional charge of defence along with the Finance portfolio. The decision to appoint Jaitley as the Defence Minister was taken after Manohar Parrikar resigned to the post. Parrikar resigned from the post to take over the Chief Minister of Goa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X