For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களில் ஜிஎஸ்டி பாதிப்பும் எதிரொலிக்கும் என மத்திய அரசு அஞ்சுகிறது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆகியோர் நேற்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ஜிஎஸ்டி விவகாரத்தில் பல சலுகைகள் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
Union Finance minister Arun Jaitley will hold a press conference at 4 pm Tuesday and the markets are expecting some major announcements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X