For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவின் புதிய 'மேப்' விவகாரம்.. மத்திய அரசு விரைந்து செயல்பட அருணாச்சல் முதல்வர் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அருணாசாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நபம் துகி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகரை இன்று நபம் துகி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனா வெளியிட்ட புதிய வரைபடம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்தோம்.

Arunachal Pradesh Chief Minister Urges Government to Act on China Map Issue

சீனா இப்படி உரிமை கோருவது தவறானது; இதை நாங்கள் ஏற்க முடியாது. அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை ஏற்கெனவே பல முறை சீனாவுக்கு தெளிவுபடுத்திவிட்டோம். ஆனால் பிரச்சனை நீடித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு சீனாவிடம் திட்டவட்டமான முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

English summary
Arunachal Chief Minister Nabam Tuki today said the NDA government should act appropriately and resolve the issue of China's reported claim over the state in a recent map.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X