For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருணாச்சல பிரதேசத்தில் பெரும் கலவரம்... 3 பேர் சுட்டுக்கொலை

Google Oneindia Tamil News

இடாநகர்: அருணாச்சலப் பிரதேச துணை முதலமைச்சர் சௌனா மெயின் வீட்டை கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதுவரை போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் வசித்து வரும் பிற மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 சமூகத்திற்கு நிரந்தர குடியுரிமை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் பரவி உள்ளது. பல வீடுகள் சூறையாடப்பட்டன. இதுவரை போலீஸ் வாகனங்கள் உட்பட 150 வாகனங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதால் அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

முன்னதாக, சட்டப்பேரவையை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துணை முதல்வர் வீட்டிற்கு தீ

துணை முதல்வர் வீட்டிற்கு தீ

குடியுரிமை சான்றிதழ் வழங்குவதாக அறிவிப்பு 5 மணிக்குள் வாபஸ் பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்திருந்த நிலையில், அரசு சார்பில் எந்த ஒரு தகவலும் வராததால் போராட்டக்காரர்கள் துணை முதலமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்தனர்.

போலீசார் மீது கல்வீச்சு

போலீசார் மீது கல்வீச்சு

மேலும், முதலமைச்சரின் வீட்டிற்கு பேரணியாக சென்று அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் இடாநகர் மற்றும் நாகர்லாகூன் மாவட்டங்களில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் 24 போலீசார் காயமடைந்தனர்.
போராட்டம் குறித்து தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் அங்கு இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு நிலவரம்

சட்டம் ஒழுங்கு நிலவரம்

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் குமார் வைய் தெரிவித்தார். மாநிலத்தில் நிலை வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலமைச்சர் பேமா கண்டுயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

திரைப்பட விழா ரத்து

திரைப்பட விழா ரத்து

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பேமா கண்டு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற இருந்த திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது இதனால் பாதுகாப்பு கருதி விருது வாங்க வந்திருந்த பிரபலங்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

English summary
Set Fire on Arunachal Pradesh deputy chief minister Chauna Mein's house . So far 3 people have been killed in police gunfire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X