For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: இன்னும் 4 வாரங்களுக்குள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உ.பி. கீழ் நீதிமன்றத்தில் கேஜ்ரிவாலை சரணடைய கடந்த 12ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கேஜ்ரிவால் அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

Arvind Kejriwal should surrender within 4 weeks: Allahabad HC

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிட்டல், இந்த வழக்குக்கு தடை விதிக்க முகாந்திரம் இல்லை. எனவே நான்கு வாரங்களுக்குள், அமேதி மாவட்ட கீழ் நீதிமன்றம் ஒன்றில், கேஜ்ரிவால் சரணடைய வேண்டும்.

அங்கிருந்து ஜாமீன் நடைமுறைகளை அவர் மேற்கொள்ளலாம். அதுவரை கேஜ்ரிவால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உத்தரவிட்டார். அவதூறு வழக்கு ஒன்றில் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது

English summary
The Allahabad High Court has ruled that if Delhi Chief Minister Arvind Kejriwal surrenders before a court in Amethi district within four weeks, no coercive action shall be taken against him till then in a criminal case pending in the lower court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X