For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக தேர்தல்: வேட்பாளர் தேர்வில் 20 கேள்வி கேட்கும் மேலிடம்: காங்கிரஸார் பேரதிர்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    வேட்பாளர் தேர்வில் 20 கேள்வி கேட்கும் மேலிடம்: காங்கிரஸார் பேரதிர்ச்சி- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாரிடம் குறைந்தது 20 கேள்விகள் கேட்கப்படுகிறது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாருக்கு கட்சி மேலிடம் அவ்வளவு எளிதில் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் பெங்களூரில் வைத்து ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகிறது.

    As Congress aspirants make a beeline for tickets, Mistry surprises them with this questionnaire

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் குறைந்தது 20 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக மதுசூதன் மிஸ்த்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மிஸ்த்ரி தலைமையிலான குழு தான் கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. இப்படி கேள்விகள் கேட்கப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பலருக்கு பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

    அந்த குழு கேட்ட கேள்விகளில் சில,

    உங்களுக்கு ஏன் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் சொல்க?

    உங்கள் தொகுதியில் உள்ள வார்டுகள் எத்தனை?

    உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டுக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?

    நீங்கள் வெற்றி பெற எவ்வளவு வாய்ப்பு உள்ளது?

    உங்களை எதிர்த்து போட்டியிடுபவருக்கு எதிராக என்ன யுக்தி வைத்துள்ளீர்கள்?

    தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்வதாக திட்டம்?

    உங்கள் தொகுதியில் எத்தனை கிராமங்கள் உள்ளன?

    உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்?

    மக்கள் உங்களை பற்றியும், தற்போது உள்ள எம்.எல்.ஏ. பற்றியும் என்ன நினைக்கிறார்கள்?

    உங்களுக்கு எதிராக ஏதாவது வழக்கு நிலுவையில் உள்ளதா?

    English summary
    Getting a ticket to contest the Karnataka Assembly Elections 2018 in the Congress would not exactly be an easy task. The top brass of the Congress has been spending a considerable amount of time at the Karnataka Pradesh Committee Office in Bengaluru grilling aspirants.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X