• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவீன் பட்நாயக்கிற்கு இன்று 75வது பிறந்த நாள்.. மக்கள் நாயகனாக உயர்த்திய சூப்பர் சாதனைகள்!

|

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு இன்று 75 பிறந்த நாளாகும். இருப்பினும், கோவிட் -19 பரவல் இருக்கும் இந்த காலகட்டத்தில், தனது பிறந்த நாளை காரணமாக கொண்டாட வேண்டாம் என்று முதல்வர் முடிவு செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரை முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்க காரணங்கள் நிறைய உள்ளன.

கடந்த மார்ச் மாதம், பட்நாயக் ஒடிசாவின் முதல்வராக 20 ஆண்டுகள் நிறைவு செய்தார் நவீன் பட்நாயக். ஒடிசா மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருப்பவர் என்ற சாதனையை படைத்தார் நவீன் பட்நாயக்.

As Naveen Patnaik turns 74, here is a look at how he continues to win hearts in Odisha

அவரது தந்தை பிஜு பட்நாயக் தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியலில் நுழைவதை ஊக்குவிக்கவில்லை. ஆனால், 1997ல் பிஜு பட்நாயக் மறைவுக்குப் பிறகு, அப்போது ஜனதா தளத்தின் ஒரு பகுதியாக இருந்த அவரது கட்சியினர் தந்தையின் மக்களவைத் தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிட நவீன் பட்நாயக்கைத் தேர்வு செய்தனர்.

பின்னர், நவீன் பட்நாயக் ஜனதா தளத்திலிருந்து விலகி பிஜு ஜனதா தளம் என்ற பிராந்திய கட்சியை உருவாக்கினார். அப்போது முதல் அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது. முதல் தேர்தல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வென்றது, ஆனால் 2009 முதல் அனைத்து தேர்தல்களும் தனியாக வென்றது.

பட்நாயக் ஒரு கடின உழைப்பாளி சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படுகிறார். கடந்த பிப்ரவரியில் பட்நாயக் முயறச்சியால் மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, பின்தங்கிய வகுப்பினருக்கான மாநில ஆணையம், OBC களின் சமூக மற்றும் கல்வி நிலைமைகள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்த இந்த தீர்மானம் முன்மொழிந்தது. இதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு பொதுமக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒரு சமூக-பொருளாதார சாதி கணக்கீட்டை நடத்துமாறு கோரி மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. இது ஓபிசிக்களின் நலன்களைப் பராமரிப்பதில் முக்கியமாகும்.

பட்நாயக்கின் முக்கிய கொள்கைகளில் ஒன்று, குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுகையாகும். 5 Ts- தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, குழுப்பணி, நேரம் மற்றும் மாற்றம் ஆகியவை இவர் பார்முலா. இந்த திட்டத்தின் கீழ், முதலமைச்சரே, அவரது அதிகாரிகள் சாதாரண மக்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள். அழைப்பின் போது பொது மக்கள் அனைத்து அரசு சேவைகளை பெறுகிறார்களா என்று கேட்கப்படுவார்கள். பட்நாயக் தனது தனிச் செயலாளர் வி கே பாண்டியனை செயலாளராக நியமித்தார். அவர் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற பல்வேறு இடங்களுக்கு திடீர் விசிட் செய்து ஆய்வுகளை செய்கிறார்.

As Naveen Patnaik turns 74, here is a look at how he continues to win hearts in Odisha

பட்நாயக் ஒரு சுத்தமான இமேஜ் கொண்ட தலைவர். இதனால், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு உந்துதல் அதிகாரிகளுக்கு கிடைக்கிறது. ஆளும் பிஜு ஜனதாதளம் அதாவது தனது கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ​​அரசு, பல கறைபடிந்த அதிகாரிகளை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

பட்நாயக் 2000 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றபோது எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று சூப்பர் புயல். இது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது மற்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஒடிசா 2019 இல் ஃபானி புயல் உட்பட பல புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொள்ள அரசு இப்போது தயாராக உள்ளது என்பதை பட்நாயக் உறுதிப்படுத்தினார். அவர் சர்வதேச அளவில் உட்பட பல மன்றங்களில் இதற்காக பாராட்டப்பட்டார்.

"வாயில் விரலை வச்சு".. என்ன இப்படி பச்சையா பேசுறார்.. வந்த முதல்நாளே எரிச்சலை கிளப்பிய அர்ச்சனா

அதிகபட்சமாக சமூக நல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திய சில முதலமைச்சர்களில் பட்நாயக் ஒருவர். அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கான கலியா திட்டம் மையத்தின் பிரதமர்-கிசான் திட்டத்திற்கு சமம். ஏழைகளுக்கு, ரூ.1க்கு, ஒரு கிலோ அரிசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். வளங்களைப் பொறுத்தவரை, சுரங்க ஏலங்கள், ஒடிசா அரசாங்கத்திற்கு கைகொடுத்துள்ளது.

அண்மையில் மத்திய, இரும்பு, எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியாவுக்கான ஜப்பான் தூதருடன் பட்நாயக்கையும் சந்தித்தார். ஜப்பான் ஒடிசாவில் முதலீட்டு வாய்ப்புகளை எதிர்பார்க்கிறது. மேலும் சுரங்கங்களின் ஏலத்தில் ஒடிசா கணிசமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பாரதீப்பில் போஸ்கோ இந்தியாவுக்கு பதில், ஜே.எஸ்.டபிள்யூ எஃகு ஆலை அமைக்கும்.

தேசிய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது ஒடிசாவின் பொருளாதாரம் தொடர்ந்து அதிக விகிதத்தில் வளர்ந்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், ஒடிசாவின் சராசரி வளர்ச்சி, தேசிய சராசரியான 6.9 சதவீதத்துடன் ஒப்பிடும்போது அதிகம். சுமார் 8 சதவீதமாக உள்ளது. உலக மற்றும் தேசிய பொருளாதாரத்தில் மந்தநிலை இருந்தபோதிலும், ஒடிசாவின் பொருளாதாரம் 2019-20 ஆம் ஆண்டில் 6.16 சதவீதமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தெரிவித்தார். இது தேசிய சராசரியான 5 சதவீதத்தை ஒப்பிட்டால் அதிகம்.

ஒடிசா ஒரு சாதகமான முதலீட்டு இடமாக உருவெடுத்துள்ளதுடன், சி.எம்.ஐ.இ டேட்டா 2019 இன் படி நாட்டின் மொத்த முதலீட்டில் 18 சதவீதத்தை ஈர்த்துள்ளது. பூஜாரி மேலும் கூறுகையில், ஒடிசா 7 ​​முதல் 7.5 சதவீதம் வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21 காலகட்டத்தில் விவசாயத் துறையில், மாநிலத்தின் சராசரி வளர்ச்சி 4.5 சதவீதமாகும், இது தேசிய சராசரியான 3.1 சதவீதத்தை விட அதிகமாகும். ஒடிசாவுக்கு தொடர்ந்து ஐந்து கிருஷி கர்மன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒடிசா அரசு நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகளையும் அமைத்துள்ளது, மேலும் ஏழு விரைவில் அமையும். முதல் எய்ம்ஸ் மருத்துவமனை, புவனேஸ்வரில் அமைக்கப்பட்டது, மேலும் பழமையான மருத்துவக் கல்லூரியான எஸ்சிபி மருத்துவக் கல்லூரியை அதிநவீன வசதியாக மாற்றவும், ரூ .1000 கோடி முதலீட்டில் எய்ம்ஸ் பிளஸ் ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனமாக மாற்றவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது நடக்கும். மார்ச் 5 ம் தேதி, பட்நாயக் அதற்கான அடிக்கல் நாட்டினார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் கிராமப்புற ஏழைகளுக்கு 20 லட்சம் கான்கிரீட் வீடுகளை மாநில அரசு வழங்கும் என்று மார்ச் மாதம் பட்நாயக் அறிவித்தார். ஏற்கனவே 25 லட்சம் கான்கிரீட் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. ஹாக்கி உலகக் கோப்பை 2018 புவனேஸ்வரில் உள்ள கலிங்க ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக நடைபெறுவதையும் முதல்வர் உறுதி செய்தார். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பையும் அரசு உருவாக்கி வருகிறது.
இந்த ஆண்டு பட்நாயக் சுய உதவிக்குழுக்களுக்காக மிஷன் சக்தியை உருவாக்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு மார்ச் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது, இது சர்வதேச மகளிர் தினமாகும். பிஜேடி ஏராளமான பெண்கள் வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதையும் இது பிரதிபலிக்கிறது.

சமீபத்திய காலங்களில் பட்நாயக் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று கோவிட் -19 க்கு எதிரான போராட்டம். இந்த மாத தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) ஒடிசா அரசாங்கத்தை கொரோனா கையாள்கைக்காக பாராட்டியது. "சமூக விலகல் நடவடிக்கைகளை கடைபிடிக்கும் போது சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது சவாலானது, ஆனால் பேரழிவு நிர்வாகத்தில் மாநிலத்தின் முந்தைய அனுபவம் நிலைமையை நிர்வகிக்க உதவியது. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான திட்டத்தால், மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்பட்டது" என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

கொரோனா முதல் கேஸ் மார்ச் 15 அன்று தெரிவிக்கப்பட்டபோது, ​​மாநிலத்தில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட ஆரம்பித்தன. ஆயத்தம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான சுகாதார அதிகாரிகளின் திறன் மேம்படுத்தப்பட்டது. கை கழுவுதல் மற்றும் நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டன.

கடந்த, ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட சிவோட்டர் கணக்கெடுப்பில், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான பிரதமர் வேட்பாளர் என்று கூறப்பட்டது.
நவீன் பட்நாயக் மிகவும் பிரபலமான முதலமைச்சர் என்றும் கணக்கெடுப்பு கூறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், யூனியன் பிரதேசத்திலிருந்தும் 3,000 க்கும் மேற்பட்டவர்களின் பதில்களை உள்ளடக்கிய "ஸ்டேட் ஆஃப் தி நேஷன் 2020: மே" என்று அழைக்கப்படும் மிகப்பெரிய, சிவோட்டர் கணக்கெடுப்பில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

 
 
 
English summary
Odisha Chief Minister, Naveen Patnaik will turn 75 on Friday. The popular CM has however decided not to celebrate his birthday on account of COVID-19, his office said. In March, Patnaik completed 20 years as the Chief Minister of Odisha. Among the many records set by him, one is that he is the longest serving chief minister of the state.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X