For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவால்.. 6 மாதம் கழித்து திறக்கப்பட்ட தாஜ்மகால்.. முதல் டிக்கெட்டே சீனாக்காரருக்குத்தான்!

Google Oneindia Tamil News

ஆக்ரா: கொரோனா லாக்டவுனால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தாஜ்மகால் நேற்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் சீன பயணி லியாங் சியாசெங்க் முதல் பார்வையாளர் அனுமதிச் சீட்டை பெற்றுள்ளார்.

சீனாவிலிருந்து 190 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் தற்போது சீன பயணி ஒருவர் தாஜ்மகால் வந்துள்ளது மற்ற சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள வெட் மார்க்கெட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவி இன்று உலகம் முழுவதும் 3 கோடி மக்களை பாதித்துள்ளது.

பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா... ஷாக் கொடுக்க காத்திருக்கும் மாதங்கள்!! பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா... ஷாக் கொடுக்க காத்திருக்கும் மாதங்கள்!!

கடற்கரைகள்

கடற்கரைகள்


உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோயில்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள், கடற்கரைகள் என அனைத்தும் மூடப்பட்டன.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்

தற்போது 8-ஆம் கட்டமாக இந்தியா முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு நீடித்து வருகிறது. இந்த கொரோனாவால் இந்தியா உள்பட உலக பொருளாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்க இந்தியா பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

வரலாற்றுச் சின்னம்

வரலாற்றுச் சின்னம்

அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 21-ஆம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றைய தினம் ஆக்ராவில் உள்ள 17-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சின்னமான தாஜ்மகால் திறக்கப்பட்டது.

குறைந்த அளவு

குறைந்த அளவு

சுற்றுலாப் பயணிகள் வருகையையொட்டி, தாஜ்மகாலில் பாதுகாப்பு நடைமுறைகள் எடுக்கப்பட்டன. எனினும் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. பொதுவாக கொரோனாவுக்கு முன்னர் தினமும் 20 ஆயிரம் பேர் முதல் 40 ஆயிரம் பேர் வரை வந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது குறைந்த அளவிலான மக்களே வந்தனர்.

தாஜ்மகால்

தாஜ்மகால்

தாஜ்மகாலுக்கு ஒரு நாளைக்கு 5000 பேருக்கு மட்டுமே அதுவும் இரு பேட்ச்களாக பிரிக்கப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய தொல்லியல் துறை அறிவித்தது. அதன்படி காலை சூரிய உதயம் முதல் மதியம் வரையும், மதியம் 12.30 மணி முதல் சூரியன் மறைவு வரையும் இரு பிரிவுகளாக தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

சீனா

சீனா

ஆனால் நேற்றைய தினம் 20 வெளிநாட்டினர் உள்பட வெறும் 1,235 பேர் மட்டுமே தாஜ்மகாலை சுற்றி பார்க்க வந்திருந்தனர். அவர்களில் சீனாவை சேர்ந்த லியாங் சியாசெங் என்பவர் தாஜ்மகாலை சுற்றி பார்க்க முதல் அனுமதிச் சீட்டை நேற்று வாங்கியிருந்தார். இது பயணிகளை மேலும் பீதியடையச் செய்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி

பொருளாதார வீழ்ச்சி

கொரோனா வைரஸ் பரவல், பொருளாதார வீழ்ச்சி, உள்ளிட்டவைகளுக்கு காரணமே சீனாதான். அங்கிருந்துதான் கொரோனா பரவியது. தற்போது சரிந்த பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு சில நடவடிக்கைகளை செய்து வரும் நிலையில் அதில் மண்ணை அள்ளி போடும் விதமாக சீனாக்காரர் ஒருவர் தாஜ்மகால் வந்தது மற்ற பயணிகளுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. நேற்றைய தினம் 5000 பேருக்கு வெறும் 1,235 பேர் மட்டுமே வந்த நிலையில் இனி இதன் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

English summary
Tajmahal reopens yesterday after corona pandemic lockdown, the Chinese man gets first visitor pass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X