For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. யாருக்கு எவ்வளவு பலம்? ராஜஸ்தானில் ஆட்சி கவிழுமா? - பின்னணி!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில், யாருக்கு எத்தனை பலம் இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் நம்பர் கேம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ராஜஸ்தானிலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவராக வர வேண்டியவர் என்று கணிக்கப்பட்ட சச்சின் பைலட் தற்போது காங்கிரஸ் கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளார்.

Ashok Gohlet vs Sachin Pilot: Who has whose support? All you need to know

தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது, அசோக் கெலாட் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் தங்களுக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது, மீதம் இருக்கும் எம்எல்ஏக்களும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள் என்று முதல்வர் அசோக் கெலாட் தரப்பு சொல்கிறது.

இரண்டு தரப்பும் மாறி மாறி, தங்களுக்குதான் அதிக ஆதரவு உள்ளது என்று கூறுகிறார்கள். தங்கள் எம்எல்ஏக்களை ரெசார்ட்டிற்கும் மாற்றி உள்ளனர். ராஜஸ்தானில் யாருக்கு எத்தனை பலம் இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

சப்போர்ட் இல்லாத சச்சின்.. திரும்பி வந்துவிடுங்கள்.. கடைசியாக அழைக்கும் காங்.. இன்று என்ன நடக்கும்? சப்போர்ட் இல்லாத சச்சின்.. திரும்பி வந்துவிடுங்கள்.. கடைசியாக அழைக்கும் காங்.. இன்று என்ன நடக்கும்?

மொத்த இடங்கள்: ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது

பெரும்பான்மை: ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை

இதுவரை நிலைமை: இதுவரை காங்கிரஸ் கட்சி அங்கு 124 இடங்கள் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து வந்தது.

கூட்டணி நிலவரம்: காங்கிரஸ் கட்சியில் 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிபிஐ கட்சிக்கு 2, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1, பாரதிய டிரைபல் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மோதலுக்கு பின் அசோக் கெலட் ஆதரவு விவரம்: அசோக் கெலட் தரப்பிற்கு ஆதரவாக 107 எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பி உள்ளனர் + அசோக் கெலட் ஆட்சிக்கு ஆதரவாக சிபிஐ கட்சிக்கு 2, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1, பாரதிய டிரைபல் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். மொத்தமாக அசோக் கெலட் தரப்புக்கு 112 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

சச்சின் பைலட்: சச்சின் பைலட் தரப்புக்கு 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தருகிறார்கள். தற்போது வரை இதுதான் நிலவரம். இனி வரும் நாட்களில் எம்எல்ஏக்கள் இரண்டு பக்கமும் அணி மாற வாய்ப்புள்ளது.

ஆட்சி கவிழுமா? : ஆட்சி அமைக்க 101 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் அசோக் கெலட் ஆட்சிக்கு அதை விட அதிக ஆதரவு இருப்பதால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

சப்போர்ட் இல்லாத சச்சின்.. திரும்பி வந்துவிடுங்கள்.. கடைசியாக அழைக்கும் காங்.. இன்று என்ன நடக்கும்?

English summary
Ashok Gohlet vs Sachin Pilot: Who has whose support? All you need to know about Rajasthan issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X