For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம்- அஸ்ஸாமில் வன்முறையில் ஈடுபட்டது பாப்புலர் பிரண்ட், நக்சல்கள்: பாஜக

Google Oneindia Tamil News

குவஹாத்தி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்களின் போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் மாவோயிஸ்டுகள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என அஸ்ஸாம் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

குவஹாத்தில் அஸ்ஸாம் பாஜக தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அஸ்ஸாமில் மாவோயிஸ்டுகள் கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி என்ற பெயரில் செயல்படுகின்றனர். இவர்கள்தான் அஸ்ஸாமில் விவசாயிகளின் முன்னணி அமைப்பினராக போராடி வருகின்றனர்.

Assam BJP blames PFI, Maoists for violences in anti-CAA protests

இந்த அமைப்புதான் பாஜக எம்.எல்.ஏ. வினோத் ஹசாரிகாவின் வீட்டை எரித்து வைத்தனர். சபுவா பகுதியில் கருவூலம், அஞ்சல் நிலையம், பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றையும் மாவோயிஸ்டுகள் எரித்தனர்.

இவர்களுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகளும் இணைந்து வன்முறைகளில் ஈடுபட்டனர். குவஹாத்தியில் நீண்டகாலமாகவே பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் மத மோதல்களை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான் செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான்

ஆகையால் மாவோயிஸ்டுகள், பாப்புலர் பிரண்ட் அமைப்புகளுக்கு எதிராக அரசு உரிய நாவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரஞ்சித்குமார் தாஸ் கூறினார்.

ஏற்கனவே அஸ்ஸாம் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர் அமினுல் ஹக், ஊடக செயலாளர் முகமது முஸம்மில் ஹக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Assam BJP president Ranjeet Kumar Dass said that the PFI activists and the Maoists were actively involved in the violent incidents in during anti-CAA protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X