For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு கல்தா.. அசத்திய பாஜக

Google Oneindia Tamil News

அசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) 17 இடங்களில் வென்றுள்ளது. . ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) 12 இடங்களிலும், பாரதீய ஜனதா கட்சி ஒன்பது இடங்களிலும். காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன..

எந்தவொரு கட்சியும் மெஜாரிட்டிக்கு தேவையான 20 இடங்களை வெல்லவில்லை என்பதால், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் முதல் முறையாக பாஜக உடன் கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்ற போகிறது.

 Assam BTC election result: BPF wins 17 seats, UPPL bags 12, BJP gets 9

போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் (பி.டி.சி) 40 இடங்களுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

கோக்ராஜர், சிராங், பக்ஸா மற்றும் உடல்கூரி மாவட்டங்களில் உள்ள கோக்ராஜர், கோசைகான், சிராங், பிஜ்னி, தமுல்பூர், பர்பத்ஜோரா, பெர்கான், முஷல்பூர், உதல்பூரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 40 சபை இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது

இதில் போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) 17 இடங்களில் வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) 12 இடங்களிலும், பாரதீய ஜனதா கட்சி ஒன்பது இடங்களிலும். காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன..

எங்களுக்கு பயம் கிடையாது... மம்தாவை எச்சரிக்கும் பாஜக... அமித்ஷா விரைவில் மேற்கு வங்கம் விஜயம்! எங்களுக்கு பயம் கிடையாது... மம்தாவை எச்சரிக்கும் பாஜக... அமித்ஷா விரைவில் மேற்கு வங்கம் விஜயம்!

முன்னனதாக கடந்த 2015 ம் ஆண்டு நடந்த பி.டி.சி தேர்தலில், பிபிஎஃப் 20 கவுன்சில் இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) நான்கு மற்றும் 15 இடங்களையும் வென்றது.

தற்பாது ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) 12 இடங்களில் வென்றுள்ளதால் பாஜக உடன் கூட்டணி அதிகாரத்தை கைப்பற்ற போகிறது. பாஜக பொதுச் செயலாளர் திலீப் சாய்கியா கூறுகையில், இரண்டாவது முறைய பிடிசி கவுன்சிலில் யுபிபிஎல் உடன் பாஜக தொடர்பில் உள்ளது என்றார். இந்த தேர்தலில் பாஜக தனது சொந்த கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணிக்கு (பிபிஎஃப்) எதிராக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Assam's Bodoland Territorial Council (BTC) election results have been declared with Bodoland Peoples' Front (BPF) winning 17 seats. The United People's Party Liberal (UPPL) has trailed with 12 seats while Bharatiya Janata Party (BJP) has won nine seats and Congress one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X