For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாம் மாநிலத்தை சூறையாடிய மழை வெள்ளம் - சொந்த ஊரில் அகதிகளாக தவிக்கும் மக்கள்

பிரம்மபுத்திராவில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் அஸ்ஸாம் மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்துள்ளதோடு உணவுக்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்க

Google Oneindia Tamil News

குவஹாத்தி: நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தை சூறையாடியுள்ளது தென்மேற்குப் பருவமழை. கடந்த சில நாட்களாகவே பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் இருப்பிடங்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர். மக்களின் இயல்பு முற்றிலும் முடங்கியுள்ளதோடு மட்டுமல்லாது வன விலங்குகளும் கூட வெள்ளநீரில் சிக்கி பலியாகியுள்ளன.

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொட்டி வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Assam flood : heavy rain affects normal life

பல லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. உடமைகளை இழந்து பல லட்சம் பேர் அகதிகளாக தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மக்களை பாதுகாக்க 700க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சிக்கு ஏறிய காமம்.. என்ன ஆனாலும் சரி.. விட்டுதர முடியாது.. எடுத்தார் கத்தியை.. பரிதாப சார்லஸ்!உச்சிக்கு ஏறிய காமம்.. என்ன ஆனாலும் சரி.. விட்டுதர முடியாது.. எடுத்தார் கத்தியை.. பரிதாப சார்லஸ்!

அங்குள்ள காசிரங்கா தேசியபூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் 8 காண்டாமிருகங்கள் உள்பட நூற்றுக்கணக்கான விலங்குகள் பலியாகியுள்ளன. கொரோனா வைரஸ், மழை வெள்ளம், தீ விபத்து என மும்முனை தாக்குதலுக்கு ஆளான அஸ்ஸாம் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Assam flood : heavy rain affects normal life

மூன்றாவது முறையாக பிரம்மபுத்திராவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால் தெரிவித்துள்ளார். மழை வெள்ளம்,கோவிட் 19 நோய் தொற்று, நிலச்சரிவு என பல பிரச்சினைகளுடன் மக்கள் போராடி வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்புகள் பற்றி பிரதமர் மோடி அஸ்ஸாம் மாநில முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
The flood situation in Assam remained grim on Tuesday while two more people died. This is the third wave of flood in Assam. This is a recurring problem in the state. People are fighting several problems. On one hand, there is COVID-19, and on the other there are floods and landslides," Chief Minister Sarbanand Sonowal said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X