For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிருப்தியிலும் அன்பு! அசாம் வெள்ளப்பாதிப்புக்கு நிவாரணம் வழங்கல்! சிவசேனா எம்எல்ஏக்கள் தாராளம்!

Google Oneindia Tamil News

கவுஹாத்தி: மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி அடைந்து கவுஹாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநில வெள்ளப்பாதிப்புக்காக ரூ.51 லட்சத்தை நிவாரணமாக வழங்கி உள்ளனர்.

Recommended Video

    Maharashtra முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக Uddhav Thackeray அறிவிப்பு *Politics

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஷ் அகாடி பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. 2019 முதல் இரண்டரை ஆண்டுகளாக இந்த கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்நிலையில் தான் கூட்டணி மீது சிவசேனா கட்சி எம்எல்ஏக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    3ம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு கோரிய வழக்கு முடித்து வைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 3ம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு கோரிய வழக்கு முடித்து வைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    அசாமில் அதிருப்தி எம்எல்ஏக்கள்

    அசாமில் அதிருப்தி எம்எல்ஏக்கள்

    சிவசேனா அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளனர். சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் என மொத்தம் 46 பேர் ஏக்நாத் ஷிண்டேவுடன் முகாமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக அவர்கள் கவுஹாத்தியில் தங்கி வருகின்றனர்.

    அசாமில் வெள்ளப்பாதிப்பு

    அசாமில் வெள்ளப்பாதிப்பு

    இந்நிலையில் தான் அசாம் மாநிலம் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 28 மாவட்டங்களை சேர்ந்த 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 130க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ரூ.51 லட்சம் நிவாரணம்

    ரூ.51 லட்சம் நிவாரணம்

    இந்த நிலையில், அசாம் வெள்ள நிவாரணத்திற்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் ரூ.51 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதி், ‛‛அனைத்து சிவசேனா எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் அசாம் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் வழங்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

    கோவாவுக்கு செல்ல முடிவு

    கோவாவுக்கு செல்ல முடிவு

    இதற்கிடையே அதிருப்தி சிவேசேனா எம்எல்ஏக்களால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவசேனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று சற்று நேரத்தில் உத்தரவு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் கவுஹாத்தியில் இருந்து கோவா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Shiv Sena reble MLAs in Guwahati have donated Rs 51 lakh for flood relief in Assam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X