For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

120 நாட்கள் இருக்கு.. கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. 19 லட்சம் பேருக்கு ஆறுதல் கூறிய அசாம் அரசு!

Google Oneindia Tamil News

புவனேசுவரம்: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேரில் உண்மையான குடிமக்களுக்கு நாங்கள் தேவையான உதவிகளை செய்வோம் என அசாம் அரசு நம்பிக்கை தெரிவித்தது.

வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். மேலும் அரசு அறிவிக்கும் அத்தனை திட்டங்களையும் இந்திய மக்களை காட்டிலும் இவர்களே பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன.

மற்ற நாடுகளில் அந்த நாட்டினருக்கு மட்டுமே சலுகைகள் வழங்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் உள்நாட்டு சலுகைகளை வெளிநாட்டினர் அனுபவித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இன்று முதல் தனியார் மயமாகிறது சென்னையின் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்இன்று முதல் தனியார் மயமாகிறது சென்னையின் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்

40 லட்சம்

40 லட்சம்

இந்த நிலையில் அசாம் மாநில மக்களை அடையாளம் காண ஏற்கெனவே கடந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியானது. இதில் அரசு கேட்கும் ஆவணங்களை கொடுக்காத 40 லட்சம் பேர் அந்தப் பட்டியலில் விடுபட்டனர்.

19 லட்சம் பேர்

19 லட்சம் பேர்

இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்றைய தினம் இந்தப் பட்டியல் வெளியானது. அதில் மொத்தமுள்ள 3.30 கோடியில் 3.11 கோடி பேர் மட்டுமே இணைக்கப்பட்டனர். மற்ற 19 லட்சம் பேர் அந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

தீர்ப்பாயம்

தீர்ப்பாயம்

இதுகுறித்து அரசு கூறுகையில் அந்த 19 லட்சம் பேரும் நாங்கள் கோரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. அவர்கள் இந்திய குடிமக்கள் என்ற பட்சத்தில் 120 நாட்களுக்குள் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிரூபிக்கலாம் என தெரிவித்தது.

அசாம் அரசு

அசாம் அரசு

பட்டியலில் விடுபட்ட 19 லட்சம் பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், தேசிய குடிமக்கள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 லட்சம் பேரும் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதற்கான ஆதாரத்தை 120 நாட்களுக்கு சமர்ப்பிக்க அசாம் அரசு தேவையான உதவிகளை செய்யும் என தெரிவித்தார்.

English summary
Assam Government promises to help the genuine people who have not excluded in National Register of Citizens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X