For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுத்தையை துடிதுடிக்க கொன்ற அசாம் கல்லூரி மாணவர்கள், அதன் வாலையும் நறுக்கிய கொடூரம்!

Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியின் ஜலுக்பாரி பகுதியில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் சிறுத்தை ஒன்றைக் கொன்று அதன் வாலை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான மொபைலில் படமாக்கப்பட்ட அந்த கொடூரத்தின் இரண்டு வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முதல் வீடியோவில் சிறுத்தை இருட்டில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அதை கண்டுபிடித்த இரண்டு மாணவர்கள் அந்த தருணத்தில். ஒரு மாணவர் விலங்கின் அருகே சென்று அதன் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அதை கண்டு அக்ரோசம் அடைந்த சிறுத்தை ஆக்ரோஷமாகி மாணவர்களை தாக்க முயன்றது.

Assam : Guwahati college student killed leopard, chop off its tail

தன்னை வீடியோ எடுக்க முயன்ற 20 வயதாகும் மூன்றாம் ஆண்டு மாணவர் டெப்ரதா சுட்டியாவைத்தான் சிறுத்தை தாக்கியது.அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவனைக் காப்பாற்ற உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். இதைக்கண்டு பயந்துபோன சிறுத்தை அங்கிருந்து தப்பியது.

இதையடுத்து மாணவர் டெபபிரதாவை சிகிச்சைக்காக அருகிலுள்ள ஜலுக்பாரி ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுத்தை மீண்டும் அந்த பகுதியில் தெரிந்தது. இதை கண்ட விடுதி ஊழியர்கள் மற்றும் மாணர்கள் சிறுத்தை மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் பரிதாபமாக சிறுத்தை உயிரிழந்து போனது.

அந்த கல்லூரியின் எம்டெக் மாணவர் நலி தாலுக்தார் கூறுகையில், "உள்ளூர்வாசிகளும் மாணவர்களும் சிறுத்தையை அகலமான குழாய்கள் மற்றும் கம்புகளால் பயங்கரமாக தாக்கினர். அதன் வால் கூட துண்டிக்கப்பட்டது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவம், நாங்கள் ஜலுக்பரி போலீசில் புகார் அளிக்க உள்ளோம்" என்றார்.

இரண்டாவது வீடியோவில், சிறுத்தை, அதன் வால் துண்டிக்கப்பட்டு, அதன் உயிருக்கு போராடுது தெரிகிறது. பின்னர் சிறுத்தை கடுமையான காயங்களால் பரிதாபமாக இறந்தது.

English summary
A group of students of Assam Engineering College, with help of local residents killed leopard, chop off its tail
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X