For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து நோயாளிக்காக ரம்ஜான் நோன்பை கைவிட்ட முஸ்லிம் இளைஞர்.. மனிதநேயத்தை நிரூபித்த அசாம் இளைஞர்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்து நோயாளிக்கு உதவ ரம்ஜான் நோன்பை விட்ட முஸ்லிம் இளைஞர்- வீடியோ

    குவாஹாத்தி: நண்பருக்கு ரத்த தானம் செய்ய ரம்ஜான் நோன்பை அசாம் இளைஞர் ஒருவர் கைவிட்ட சம்பவம் அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

    அசாம் மாநிலம் டர்ராங் மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக உள்ளது மங்கல்டோய். இப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் பனாவுல்லா அகமது மற்றும் தபாஷ் பகவதி ஆகியோர் ஆவர்.

    இருவரும் மனிதநேயம் என்ற பேஸ்புக் குழுவை இயக்கி வருகின்றனர். இதில் இந்தியாவில் உள்ள ரத்ததானம் செய்பவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தகவல்களை வைத்துள்ளனர்.

    'மெட்காலா' பிரியங்கா சோப்ராவின் தோற்றத்தில் மம்தா பானர்ஜியின் படம்: பாஜக பெண் நிர்வாகி கைது! 'மெட்காலா' பிரியங்கா சோப்ராவின் தோற்றத்தில் மம்தா பானர்ஜியின் படம்: பாஜக பெண் நிர்வாகி கைது!

    பகவதி

    பகவதி

    இந்த நிலையில் ரம்ஜான் மாதம் என்பதால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நோன்பு தொடங்கியது. பனாவுல்லா முஸ்லிம் என்பதால் அவர் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளார். இந்த நிலையில் பகவதிக்கு கடந்த 8-ஆம் தேதி ஒரு போன் வந்தது.

    செல்போனில்

    செல்போனில்

    அதில் தீமாஜி என்பவருக்கு கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவருக்கு பி பாசிட்டிவ் ரக ரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது என்று செல்போனில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பகவதியும் அகமதும் மருத்துவமனைக்கு சென்று தங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள்ள ரத்ததானம் அளிப்பவர்களை தொடர்பு கொண்டனர். அதில் சிலர் வந்து ரத்தம் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டது.

    ரம்ஜான் நோன்பு

    ரம்ஜான் நோன்பு

    இதையடுத்து அகமது அதே ரத்தவகையை சேர்ந்தவர் என்பதால் அவர் கொடுக்கலாம் என நினைத்தார். பொதுவாக முஸ்லிம் சகோதர சகோதரிகள் ரம்ஜான் நோன்பு இருக்கும்போது அவர்களது ரத்தம் சிந்தக் கூடாது என்பது ஐதீகம்.

    நோயாளி

    நோயாளி

    இதையடுத்து ஒரு உயிரை காக்க நோன்பை கைவிடுவது என முடிவு எடுத்தார் அகமது. பின்னர் நோன்பை கைவிட்டுவிட்டு ரத்தம் கொடுத்தார். இதனால் அந்த நோயாளியின் உயிரும் காக்கப்பட்டது.

    தகுதியானவர்கள்

    தகுதியானவர்கள்

    இதுகுறித்து அகமது கூறுகையில் ரத்தம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவுடன் எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. உடலளவில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் அனைவரும் ரத்தம் கொடுக்க தகுதியானவர்கள். ரத்த தானம் என்பது கடவுளுக்கு செய்யும் தொண்டை போன்றது என்றார்.

    English summary
    Panaullah Ahmed, a Muslim man from Mangaldoi, the administrative headquarters of Darrang district in Assam, chose humanity over religion after he donated blood to save the life of a Hindu man.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X