For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாமில் பிரமாண்ட போராட்டம்

Google Oneindia Tamil News

குவஹாத்தி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாமில் பல்வேறு அமைப்புகள் இன்று கண்டன போராட்டம் நடத்தின.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

Assam organisations Protest against Citizenship Amendment Bill

இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் மிகக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தேசிய குடிமக்கள் வருகைப் பதிவேடு நடைமுறையால் சுமார் 90 லட்சம் பேர் நாடற்றவர்கள் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திகாரில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே.. ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ப. சிதம்பரம்.. மத்திய அமைச்சர்திகாரில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே.. ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ப. சிதம்பரம்.. மத்திய அமைச்சர்

தற்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதால் தங்களது தனித்த அடையாளம் பாதிக்கப்படும் என்பது வடகிழக்கு மாநில மக்களின் அச்சம். வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியுரிமை சட்ட திருத்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இதனை ஏற்க மறுத்து வரும் வடகிழக்கு மாநிலங்கள் குடியுரிமை வழங்கும் திட்டத்தையே கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் இன்று பல்வேறு அமைப்புகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

English summary
Different organisations including Krishak Mukti Sangram Samiti protest in Guwahati against the Citizenship Amendment Bill (CAB).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X