For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாமில் 70% வாக்குகள் பதிவு- வன்முறையில் போலீஸ்காரர் பலி- துப்பாக்கிச் சூடு!!

By Mathi
|

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதி கட்டமாக 6 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு பிரதமர் மன்மோகன்சிங் மனைவியுடன் வந்து இன்று வாக்களித்தார். மேலும் இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியாகி உள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று 6 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 74 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இன்று காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் திஸ்பூரில் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரன் கவுர் ஆகியோர் வாக்களித்தனர்.

Assam votes for six Lok Sabha seats

அஸ்ஸாமில் உள்ள 14 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக ஏற்கெனவே நடைபெற்று முடிவடைந்தது. அதில் 78% சதவீத வாக்குகள் பதிவானது.

இன்று வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் சுமார் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.

கலவரம்- போலீஸ்காரர் பலி

அசாமில் கோக்ராஜ்கர் பகுதியில் வாக்குப் பதிவின் போது வன்முறை வெடித்தது. இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். இதைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்தும் அங்கு பதற்றமான ஏற்பட்டது.

English summary
Balloting for six Lok Sabha seats in Assam began on Thursday in the final round of voting in the state, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X