For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 ஆவணங்கள் அளித்தும்.. சொத்தை விற்று வாதாடியும்.. என்ஆர்சியால் வெளிநாட்டவராக்கப்பட்ட அஸ்ஸாம் பெண்

Google Oneindia Tamil News

குவாஹாட்டி: போதிய ஆவணங்களை அளித்தும் சொத்துகளை விற்று வாதாடியும் என்ஆர்சி சட்டத்தால் அஸ்ஸாம் மாநில பெண் ஒருவர் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955-இல் இந்திய குடிமக்கள் அனைவரையும் பதிவு செய்ய வழி வகை செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் நோக்கமே வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் வாழ்ந்து வருவோர் தாங்களின் மூதாதையர்கள் இந்தியாவில்தான் இருந்தனர் என்பதற்கான சான்றிதழை அரசிடம் சமர்ப்பிப்பது ஆகும். இந்த முறை கடந்த 2013-ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் போராட்டம்

நாடு முழுவதும் போராட்டம்

இது மெல்ல மெல்ல 2021-இல் மற்ற மாநிலங்களிலும் இந்திய அரசு அமல்படுத்தும். இது போல் சட்டரீதியான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால் அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். இந்த சட்டத்தை எதிர்த்து தற்போது நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

காணாமல் போன பெண்

காணாமல் போன பெண்

இந்த என்ஆர்சியால் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் மாநிலம் பக்ஷா மாவட்டத்தில் உள்ள கோயபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஜபேடா பேகம் (51). இந்த கிராமம் தலைநகர் குவாஹாட்டியிலிருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஹஜோ பகுதியில் இவர்களது நிலம் ஆற்றில் அரிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜபேடாவின் பெற்றோர் பக்ஷாவுக்கு வந்தனர். இவரது கணவர் ரெஜாக் அலி. இவர்களுக்கு 3 மகள்கள். அவர்களில் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார். மற்றொரு பெண் காணாமல் போய்விட்டார்.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

3ஆவது மகள் அஸ்மினா அங்குள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜபேடாவின் கணவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால் அவரது மனைவி மட்டுமே சம்பாதித்து வருகிறார். அவர் வெளிநாட்டவர் என கடந்த 2018இல் அஸ்ஸாம் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பட்டினி

பட்டினி

ஆனால் என்ஆர்சிக்காக ஜபேடா தாக்கல் செய்த நில வருவாய் ரசீது, வங்கி ஆவணங்கள், பான் கார்டு ஆகியவற்றை வைத்து குடியுரிமையை நிரூபிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. தற்போது வாழ வழியில்லாமல் ஜபேடா தவித்து வருகிறார். இது குறித்து அவர் கண்ணீருடன் கூறுகையில் சட்டரீதியான போராட்டத்திற்காக நான் சம்பாதிக்கும் பணம் செலவிடப்பட்டதால் எனது மகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் உண்ண உணவு இல்லாமல் பட்டினியாகவே தூங்குவார்.

தீர்ப்பாயம்

தீர்ப்பாயம்

எனக்கு பிறகு அவளது எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது. என்னிடம் இருந்தவை அனைத்தையும் நான் செலவு செய்துவிட்டேன். இதற்கு மேல் வழக்குகளுக்காக செலவு செய்ய என்னிடம் எதுவும் இல்லை. எனது தந்தை ஜாபத் அலியின் 1966, 1970, 1971ஆம் ஆண்டு வெளியான வாக்காளர் பட்டியல் உள்பட 15 ஆவணங்களை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துவிட்டேன். ஆனால் தீர்ப்பாயம் இந்த ஆவணங்கள் போதாது என கூறிவிட்டது.

ரூ 150க்கு கூலி வேலை

ரூ 150க்கு கூலி வேலை

எனது பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் கிராமத் தலைவரிடம் எனது பிறந்த இடம், பெற்றோர் பெயரை குறிப்பிட்டு ஒரு சான்றிதழை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அதை தீர்ப்பாயமோ நீதிமன்றமோ ஏற்கவில்லை. எனக்கென இருந்த 3 பிகா நிலங்களையும் வழக்கு செலவுகளுக்காக விற்றுவிட்டேன். தற்போது வேறொருவர் நிலத்தில் தினமும் ரூ 150 கூலிக்கு வேலை செய்கிறேன் என்றார் ஜபேடா.

தொற்றி கொண்ட அச்சம்

தொற்றி கொண்ட அச்சம்

இதுகுறித்து கிராமத் தலைவர் கலிடா கூறுகையில் ஜபேடா வழக்கில் நான் சாட்சியாக அழைக்கப்பட்டேன். அந்த பெண்ணை எனக்கு தெரியும் என அவர்களிடம் கூறினேன். திருமணமான பெண் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள ஏதுவாக அரசால் அளிக்கப்படும் சான்றிதழையும் அளித்தேன். ஆனால் அதை தீர்ப்பாயமும் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். தற்போது எங்கு செல்வது என தெரியாமல் சுப்ரீம் கோர்ட் செல்ல பணமில்லாமலும் ஜபேடா தவித்து வருகிறார். இன்னும் எத்தனை "ஜபேடாக்கள்" இந்த என்ஆர்சியால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்த அச்சம் அந்த மாநில மக்களை தொற்றிக் கொண்டுவிட்டது.

English summary
Assam Woman who lives in remote corner of the state declared as the Foreigner by Assam Foreigner Tribunal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X