For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்.. ஆந்திர போக்குவரத்து துறை அதிகாரியிடம் சிக்கிய ரூ.800 கோடி! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையின் துணை ஆணையர் மோகன் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.800 கோடி மதிப்புள்ள பணம், நகை, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது, அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையின் துணை ஆணையர் மோகன் என்பவரின், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

Assets worth Rs 800 crores from Andhra Pradesh transport official's premises

இந்த சோதனையில் சுமார் ரூ.100 கோடி முதல் 120 கோடி ரூபாய் வரையிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், இந்த சொத்துக்களின் மார்க்கெட் மதிப்பு சுமார் 800 கோடி ஆகும். மோகனுக்குரிய ஏராளமான வங்கி லாக்கர்கள் இன்னும் திறந்துபார்க்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்த மோகன், விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

/news/india/assets-worth-rs-800-crores-from-andhra-pradesh-transport-off-252531.html

English summary
In a big catch, the Anti-Corruption Bureau of Andhra Pradesh has arrested a deputy transport commissioner who was in possession of assets worth Rs 800 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X