For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரோவுக்கு "டபுள்" மடங்கு நிதி ஒதுக்கீடு.. அதாவது ரூ. 6000 கோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்ரோ நிறுவனத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த முறை 2 மடங்கு அளவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு நிறுவனம்தான் இஸ்ரோ. இந்த முறை பட்ஜெட்டில் இஸ்ரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது மோடி அரசு.

கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிக நித ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ. 6000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2013ல்

2013ல்

2013-14 பட்ஜெட்டில் இஸ்ரோவுக்கு ரூ. 4000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது 6000 கோடி

தற்போது 6000 கோடி

தற்போது இது ரூ. 6000 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ரூ. 3545.63 கோடி நிதி விண்வெளித் தொழில்நுட்பத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இன்சாட் திட்டத்திற்காக ரூ. 1412.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிறைய திட்டங்கள்

நிறைய திட்டங்கள்

2014-15ல் பல விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதில் ஜிஎஸ்எல்வி எம்கே 3, பிஎஸ்எல்வியின் ஒரு வணிக ரீதியிலான திட்டம் உள்ளிட்டவையும் அடங்கும்.

சந்திரயானுக்கு ரூ. 60 கோடி

சந்திரயானுக்கு ரூ. 60 கோடி

சந்திரயான் 1 மற்றும் 2 திட்டங்களுக்காக மொத்தம் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English summary
In a major boost for India's space programme, the Narendra Modi government has earmarked Rs 6,000 crore for ISRO in its maiden budget, which is a whopping 50 per cent jump in the agency's funding over last year. In 2013-14, although the Department of Space was initially given Rs 5,615 crore, that allocation was later revised to Rs 4,000 crore. A major chunk of the allocation in the new budget, Rs 3,545.63 crore, is for space technology while Rs 1,412.98 crore has been set aside for the INSAT project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X